பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • திறமை என்பது எதனையும் செய்வதற்கான ஒர் ஆற்றலே தவிர வேறெதுவுமில்லை, என்ன செய்யப்பட்டது என்பதண் சிறப்பு

அதன் நோக்கம் மற்றும் பொருளைச் சார்ந்ததாகும்.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • திறமை என்பது அரிதானதாகும். அது ஒர் ஒழுங்கு முறையுட

னும், கவன நிறைவுடனும் பேணப்பட வேண்டும்.

வி.இ.இலெனின்

  • திறமை என்பது, பொய் உரைக்க இயலாத அல்லது உண்மை யைத் திரித்துக் கூற இயலாத மதிப்பு மிகுந்த பண்பினைப் பெற் றிருப்பதாகும். இவான் கொஞ்சரோவ்
  • ஒரு மனிதனின் பரிசு என்பது ஒரு வைரமாகும். அதனைப் பெற்ற பின்பு, அதனைப் பட்டைத் தீட்டி, அதன் ஒளிவீச்சைக் காட்டுவதில் காலம் கடத்தாதே. ஏ.வி.சுவரோவ்
  • ஒரு கொடையினை முன்னேற்றிக் கொள்வதற்கு விடாமுயற்சி

யும், பொறுமையும் தேவைப்படுகின்றன.

அலெக்சாண்டர் எர்சன்

/* ஒரு கலைஞனாக ஆவதற்கு, திறமையோ கலையின் பால்

விருப்பம் மட்டுமோ போதுமானதில்லை. தகுதி நிறைந்த ஏதோ

ஒன்றினைப் பெற்றிருப்பதற்கு, அவற்றுடன் கடின உழைப்பும்

சேர்க்கப்பட வேண்டும். அலெக்சாண்டர் எர்சன்

  • மிகுந்த திறமை பெற்றிருப்பதற்கு, மிகுந்த அக்கறை, ஊக்கம் வேண்டும். பியோடர் செய்கோவ்ஸ்கி
  • திறமை என்பது மதிப்பு மிகுந்த வைரக் கல்லைப் போன்றது, அதிக உழைப்பைச் செலுத்தி அதனைப் பட்டைத் தீட்டினால், அது இன்னமும் அழகானதாகத் திகழும். பியோடர் செய்கோவ்ஸ்கி

116