பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தண்

  • பேரறிவு கொண்டவர் என்ற முத்திரை குத்தப்பட்ட ஒருவரும், நரகம் போன்று துன்பமளிக்கும் தொடர்ந்த விடாமுயற்சியுடன் உழைக்காவிட்டால், பெரிதாக ஒன்றினையும் படைக்க முடியாது. பியோடர் செய்கோவ்ஸ்கி
  • விடாமுயற்சியற்ற திறமை என்பது மிகக் குறைவாகச் சாதிக்க முடியும்; திறமையற்ற விடாமுயற்சி, அவற்றில் எவையும் நம்மை வியப்பு நிறைந்தவர்களாக்காவிடினும், அதிகப்படியானதைச் சாதிக்க முடியும். இதனால்தான் திறமை என்னும் நற்பேறு பெற்றவர்கள் தோல்வியால் கீழே விழும்போது, கடினமாக உழைக்கும் அதிகத் திறமையற்றவர்கள் பெரும் புகழ் எய்து கின்றனர். ஆண்டன் ருபின்ஸ்டின்
  • தொடர்ந்த உழைப்பின்றி, உண்மையான பெரிய விளைவு எதுவும் ஏற்பட இயலாது என்பதால், கலைத் தன்மையில் நாட்டம் பெற்றிருப்பதற்கான ஒரு தேவையாக அது இருக்கிறது.

அலெக்சாண்டர் பூஉழ்கின் * தனது நல்வாழ்வைத் துறக்கும் அளவுக்கு இலக்கியத்தை விரும்ப இயலாதவன், அதனைத் தொடாமல் அதனை அவ்வாறே விட்டுவிடுவதே சிறந்ததாகும். நிகலாய் லெஸ்கோவ்

  • எழுத்தாளரும் கவிஞரும் துண்டுதல் ஏற்படும் நேரங்களில் மட்டுமே பணியாற்ற இயலுமென மக்கள் இன்னமும் நினைக்கின்றனர். இதனால்தான் அன்றோ, பல எழுத்தாளர்கள் துண்டுதல் வரும் என்று காத்திருந்து பல ஆண்டுகளாக எதையுமே எழுதாமல் உள்ளனர்? துண்டுதல் என்பது நமது செயலில் விளைவது எண்பதைப் பற்றி உறுதிப்படுத்தப்பட்ட எண்ணத்தை நான் பெற்றிருக்கிறேன். நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி
  • உலகின் எந்த இலக்கியக் கவியுமே, தனக்கு முற்பட்டவர்களின்

தாக்கத்திலிருந்து, ஒரு குறைந்த அளவு கொள்வதிலிருந்தாவது, எப்போதுமே தப்பித்தது இல்லை. தாக்கம் என்பது, பட்டறி

117