பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் - த. கோவேந்தன்

  • நீ நன்கு சிந்தனை செய்வாயேயானால், உனது சிந்தனைகள் நற் செயல்களாகவே கனியும். இலியோ தோல்கதாய்
  • ஒவ்வொரு மனிதனிலும், அவனது செயல்களிலும் இருந்து, ஒருவனால் எப்போதும் தன்னைப் பற்றி அறிந்து ஏற்றுக் கொள்ள இயலும். இலியோ தோல்கதாய்
  • மற்றவர்களின் செயல்களைப் பற்றி பேசும் போது, திறனாயும்

உன்னுடைய செயல்களையும் நினைவில் வைத்துக் கொள்.

இலியோ தோல்கதாய்

  • மிகுந்த இழிவான பின்விளைவுகளுக்கு வழிவகுக்கும் துண்டுதல் களிலேயே மிகப் பொதுவானது “ஆனால் அனைவரும் அதனைச்

செய்கின்றனரே” என்று கூறுவதற்கான துண்டுதலே.

இலியோ தோல்கதாய்

  • உனது செயல்கள் ஒவ்வொன்றும் மற்ற மக்களின் மீது எதிரொலிக் கின்றது; உன்னையன்றி, உன்னருகில் மற்றவர்களும் உள்ளார்கள்

என்பதை எப்போதுமே மறந்துவிடாதே.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • ஒரு மிகைப்படுத்தப்பட்ட செயலானது, சோர்வுற்ற மனப்பாங்கின் உடன்பிறந்ததுவாகும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • மிகைப்படுத்தப்பட்டவை அனைத்துமே கேடு பயப்பவை. நல்லவை பயன் நிறைந்தவை. அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட நிலைக்குச் செல்லுமானால், ஒரு குறிப்பிட்ட எல்லையைக் கடந்த பின், கேடு நிறைந்தவையாகவும், துன்பம் தருவதாகவும் அவை மாறவே செய்யும். வி.இ.இலெனின்
  • ஒரு மனிதனின் தவறுகள், அவனது திறமைகளின் ஒரு தொடர்ச்சி

யாக இருப்பவை, இருந்து இருப்பவை. ஆனால் அத் திறமைகள், அவை தேவைப்பட்ட காலத்திற்கு மேல் தொடரப்பட்டாலோ அவை

125