பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

பேகம் இiஇடு)

  • ஒரு சொல் என்பதே ஒரு செயலாக மாறுவதாகும்.

இலியோ தோல்கதாய்

  • நீ நன்கு அறிந்திருப்பவை பற்றி மட்டுமே நீ பேசு; இல்லையெனில் எதனைப் பற்றியுமே பேசாமலிரு. இலியோ தோல்கதாய்
  • மக்கள் பேசக் கற்றுக்கொள்கின்றனரேயன்றி, எப்போது எவ்வாறு பேசவேண்டும் என்பதைப் பற்றி கற்றறிந்து கொள்பவர்களாக இருப்பதில்லை. இலியோ தோல்கதாய்
  • ஒரு நீண்ட பேச்சுக்குப்பின் நீசொன்னது அனைத்தையும் நினைவுப் பருத்திப் பார்த்தாயேயானால், எவ்வளவு ஆழமற்றதாக, தேவை யற்றதாக, சில சமயங்களில் அழகற்றதாகவும் அது இருந்தது என்பதைக் கண்டு நீ வியப்படையவே செய்வாய்.

இலியோ தோல்கதாய் * வெகு விரைவாகவும் நேரிடையாகவும் ஒரு கருத்து ஒலிக்கபபடும் போது, பெரும்பாலும் அது மேலோட்டமானதாகவும் மாற்றத் துக்கு உட்பட்டதாகவுமே இருப்பதாகும்.

நிகலாய் தோப்ரோலியுவோம் * நீ எடுத்து வைக்கும் அடியினைவிட உனது சொற்களை அளந்து பேசுவது, எந்த விதத்திலும் குறைந்த இன்றியமையாத தன்மை யைப் பெற்றிருக்கவில்லை என்பதால், உனது நலன் கருதி, பேசு வதில் எச்சரிக்கையுடன் இரு. என்.வி.செல்குனேவ்

  • ஒர் அற உணர்வற்ற, கருமையான, அக்கறையற்ற சொல் காயப் பருத்தி, துன்பமளித்து, மனத்தை வருத்தி, திகைக்கச் செய்து அல்லது அழிக்கவும் கூரும் என்பதால் அதனைக் கையாளுவதில் எச்சரிக்கையுடன் இரு. வாசிலி ககோம்லின்ஸ்கி
  • பிறர் பேசுவதைக் கேட்பதில் முதல்வனாகவும், நீ பேசுவதில் இறுதி யானவனாகவும் இரு. பெண்டி கபியேவ்
  • பேசாமலேயே அமைதி காத்துக் கொண்டே, ஒருவரால் அதிகப் படியானவற்றைக் குறிப்பால் உணர்த்தவும், செய்யவும் இயலும். பெண்டி கபியேல்

130