பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • பொதுவறம் உண்மைத் தண்மையின் இலக்கியத்திற்கும், மக்களின் வாழ்க்கையின் பகுதியாக இருக்கும்; மக்களுக்குத் தொண்டாற்றும் இலக்கியத்திற்கும், வாழ்க்கையின் உண்மை யென்பதே எப்போதும் விதியாக இருந்து வந்துள்ளது; இருக்க வேண்டும். காண்ஸ்டாண்டின் பெடின்
  • சுருங்க விளக்குவதாயின், பொதுவறம் உண்மைநிலை என்பது

வாழ்க்கை முன்னேற்றமடையும்போது அதனைப் பற்றிய ஒர்

உண்மை நிறைந்த வெளிப்படுத்துதல் எடுத்துக் காட்டுதல் என்பதே

யாகும். பொதுவறமென்ற உணர்வு படைத்த மக்களுடன், இலக்கி

யத்தின் கல்விப் பணி கொண்டிருக்கும் தொடர்பினை உடன்பட்டு ஏற்றுக் கொள்ளப்பருவது என்பதாகும் அது.

- அலெக்சாண்டர் பெடயேவ்

  • கடந்த காலம் நாம் பங்கேற்றுக்கொண்டிருக்கும் படைப்பில் ஒன்றை நிகழ்காலம் என்ற உண்மைகளை மட்டுமே நாம் அறிந்திருக்க வேண்டுமென்பதில்லை. எதிர்காலம் என்பது பற்றிய ஒரு மூன்றாம் நிலையையும் நாம் அறிந்திருக்க வேண்டும். அதுவன்றி, பொது வற உண்மை நிலையின் நடைமுறையை நாம் எப்போதுமே புரிந்து கொள்ள முடியாது. நீ எதனை எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறாய் என்பதைத் தெளிவாகவும் சரியாகவும் அறிந்து கொள்ள, உனக்கு எண்ன தேவை என்பது பற்றி நீ அறிந்திருக்க வேண்டும். மாக்சிம் கோர்கி
  • நமது எதிர்கால குறிக்கோள்கள் என்னும் மலைக்கொரு முடிகளில் இருந்து, நமது கடந்த காலத்தையும், நிகழ்காலத்தையும் காண நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மாக்சிம் கோர்கி
  • கடந்த காலத்தைத் தெளிவாகக் காண உதவும் எதிர்காலத் திற்கான ஒரே நேர்ப் பாதையை நமக்குக் காணச் செய்யும் ஒரு மிகவுயர்ந்த அறிவுக் கொடு முடியை அறிவியல் பொதுவறம் நமக்காக உருவாக்கித் தந்துள்ளது. மாக்சிம் கோர்கி

133