பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • இலக்கியத்தின் மதிப்பு அது எதனை எவ்வாறு பரப்புகிறது என்பதைப் பொறுத்ததாகவுள்ளபோது, அது ஒரு பணியாள னாக இருப்பதாகும்; அதனுடைய இன்றியமையாத தன்மை என்பது கருத்துகள் பற்றி அது மேற்கொள்ளும் பரப்புதலில் உள்ளதாகும். நிகலாய் தோப்ரோலியுபோல்
  • குறிக்கோள் என்பதே கலையின் நோக்கமாகும்.

அலெக்சாண்டர் பூஉக்கின்

  • கலையென்பது வாழ்விலும், மனித ஆற்றல்களிலும் நம்பிக்கை ஊட்டுவதாக இருக்க வேண்டும். அலெக்சாண்டர் எர்சன்
  • மனிதன் தன்னைப் புரிந்து கொள்ளவும், தன்னுள்ளே உள்ள தன்னம்பிக்கையினை உறுதிப்படுத்திக் கொள்ளவும், உண்மைக் கான ஏக்கத்தைப் பாதுகாத்து வளர்க்கவும், மக்களிடையே உள்ள கேடுகளுடன் போரிடவும், அவற்றில் உள்ள நல்லனவற்றைக் கண்டறியவும், அவர்களின் உள்ளுயிரில் உள்ள வெட்கம், சீற்றம், வீரம் ஆகியவற்றைத் தட்டியெழுப்பவும், மக்களைப் பெருமைப் பரும்படி வலிமையுடையவர்களாக ஆக்கவும் மனிதனுக்கு உதவுதல் என்பதே இலக்கியத்தின் நோக்கமாகும்.

மாக்சிம் கோர்கி

  • கலை என்பது மக்களைப் பெருமை விக்கவர்களாக ஆக்க வேண்டும். மாக்சிம் கோர்கி
  • அறிந்தோ, அறியாமலோ அனைத்துக் கலைகளும் மக்களின் உணர்வுகளை எழுப்புவது, வாழ்க்கையின் ஒரு குறிப்பிடப்பட்ட சூழ்நிலையின் மீது ஒருவகையாகவோ மற்றொருவகையாகவோ மனப்பாண்மையை உண்டாக்கி வளர்ப்பது என்ற நோக்கத்தை தாங்களாகவே படைத்துக் கொள்கின்றன. மாக்சிம் கோர்கி
  • நமது கலை உண்மை நிலையைவிட மேம்பட்டதாக உயர வேண்டும்; அது மனிதனை உண்மை நிலையிலிருந்து பிரித்து விடாமல் அவனை அதற்கு மேலே உயர்த்தவேண்டும்.

மாக்சிம் கோர்கி

144