பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •o த. கோவேந்தண்

  • ஒவ்வொரு கலைப் பணியும் அந்தந்தக் காலங்களின் அடை

யாளத்தைத் தவறாமல் பெற்றிருக்க வேண்டும்.

பியோடர் செய்கோவ்ஸ்கி

  • புதுமையென்ற ஒர் உணர்வற்ற கலையென்ற ஒன்று இருப்பது இல்லை. செர்ஜி கோனென்கோ
  • கலைஞன் அவனது காலத்தைய கருத்துகளுடன் இணைந்து

நடை பயில்பவனாக இருக்க வேண்டும்.

அலெக்சாண்டர் இவனோவ்

  • அவனது காலத்து உணர்வுகளுக்குப் பணியத் தவறுபவனாக

இருக்க எந்தக் கலைஞனாலும் இயலாது. - அலெக்சாண்டர் செரோவ்

  • புதுமையானவை அனைத்தும் நிலைத்து நிற்பவையல்ல; ஆனால் நிலைத்து நிற்பவை அனைத்தும் எப்போதுமே புதுமையாக இருப்பவை. யெப்கெனி வக்டாண்கோ
  • பழமையான மதிப்பீடுகளைப் பாதுகாத்துப் புதியவற்றை உரு வாக்கிக் கொண்டிருக்கும் ஒரு மாபெரும் நாடான நம் நாட்டைப் பாராட்டிப் புகழ்வதே, இலக்கிய வரலாற்றாசிரியப் பணியில், வரலாற்றுப் புதின எழுத்தாளர்களின் முதன்மைப் பணியாகும்.

யூரிடினியானோவ்

  • எந்தத் தனி மனிதனாலும், அவன் எழுத்தாளனாயினும், பாடல், இசை இயற்றுபவராயினும், அறிவியலாளனாயினும், பண் பாட்டுப் பணியாளனாயினும் சரி, சமூகத்திலிருந்தும், வாழ்வி லிருந்தும் தன்னைப் பிரித்துத் தனிமைப்படுத்திக் கொள்ள இயலாது. கருத்துகள், மகிழ்ச்சிகள், துண்டுதல்கள், பட்டறிவு ஆகியவையின்றி எந்தப் படைப்பும் இருக்க இயலாது.

~. திமிட்ரி சோஸ்டாகோவிச்


149