பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் க்கோவேந்தன்

  • எவ்வளவு மக்களுக்கு இயலுமோ அவ்வளவு பேருக்கும் தெளி வானதாகவும், உரக்க ஒலிப்பதாகவும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாகவும் நமது சொல் இருக்க வேண்டும்.

எம்.எம். பிரிஉடிவின் * அறிவியலும் கலையும் உண்மை நிலையென்னும் தங்கத்தைக் கழுவிவிட்டு, அதனை அறிவுக் கூர்மையுடைய வடிவங்களாக அடித்து மாற்றிவிட்டன. விசாரியோன் பெலின்ஸ்கி

  • அழகு என்பது கலைக்குப் பொதுவிதியாகும் என்பதும், அழகின்றி எந்தக் கலையும் இல்லை எண்பதும் ஒரு பழமொழியாக உள்ளது. விசாரியோன் பெலின்ஸ்கி
  • கலையில் எதுவுமே தெளிவற்ற குழப்பமானதாகவும், அறிவுக்

கூர்மையற்றதாகவும் இருக்கக் கூடாது.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • வடிவம் என்பது பொருளடக்கத்தைப் பற்றி ஒரு வெளிப்பாடாக இருக்கும்போது, பொருளடக்கத்தை வடிவத்திலிருந்து பிரிப்பது பொருளடக்கத்தை அழிப்பது என்பது போல அவை ஒன்றுடன் ஒன்று மிக நெருங்கியபடி தொடர்புபடுத்தப்பட்டுள்ளன, அதே போன்று பொருளடக்கத்தை வடிவத்திலிருந்து பிரிப்பது வடிவத்தை அழிப்பதாகும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • வடிவங்களைப் போற்றி, உள்ளடக்கத்தைப்பற்றி அக்கறையற்ற எழுத்தாளர்களின் கலைப் படைப்புகளும்கூட சில கருத்துகளை

வெளிப்படுத்துவதாகவே கட்டாயம் இருக்க வேண்டும்.

ஜி.வி.பிளக்கனேவ்

  • அழகு எண்பது வடிவு என்பதை உள்ளடக்கத்துடன் தொடர்பு பருத்துவதாகும். ஜி.வி.பிளக்கனேவ்
  • கலையில் உள்ள உண்மையான அழகு நிறைந்தவை மீது காலம்

எண்பது எந்த ஆற்றலையும் பெற்றிருக்கவில்லை.

அலெக்சாண்டர் செரேவ்

153