பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்





சுருக்கமென்பது, பொதுவாக ஒரு துண்டுத் தாளில் சுருக்கமாக எழுதப்படுவது என்பதை உள்ளடக்கியதன்று. ஆனால் ஆழமற்ற சொற்கள் இல்லாதபடி சில சொற்களில் மிகுதியானவற்றைக் கூறும் பொருட்செறிவுள்ள கருத்துக் கூட்டங்களை உள்ளடக்கிய தாகும். - ஜி. ஆர்.டெர்சாவின்

வாழ்க்கை போலவே, இலக்கியத்திலும் ஒருவர் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய விதி: மக்கள் எப்போதுமே தாங்கள் அதிகமாகப் பேசிவிட்டதற்காக ஒராயிரம் முறை வருந்து கிறார்களேயன்றி, அவர்கள் எப்போதுமே தாங்கள் குறைவாகப் பேசியதற்காக வருந்துவதில்லை. ஏ.எப். பிசெம்ஸ்கி

மக்கள்பால் கலையின் பரிவும் குறிக்கோள் பொறுப்பும்

கலையும் மக்களும் ஒன்றாக இணைந்தே பயன்பெற்று உயர் வடைகின்றனர். மாக்சிம் கோர்கி

மக்களெனப்படுபவர் பொருளியலான மதிப்பீடுகளை உருவாக் கும் ஆற்றலாக இருப்பவர் மட்டுமல்லர், உள்ளுயிர் மதிப்பீடுகளுக் கான வற்றாத ஒரே ஊற்றாக இருப்பவருமாவர். காலம், அழகு, பேரறிவு ஆகியவற்றைக் கொண்ட முதல் கவிஞரும், மெய்யியல் ஆசிரியரும் அனைத்துப் பெரிய கவிதைகளை இயற்றுபவர் ஆவர். (உலகின் அனைத்து அவலங்கள், அனைத்திலும் மிக உயர்ந்ததான உலகப் பண்பாட்டு வரலாறு பற்றியது.

மாக்சிம் கோர்கி

நமது புத்தகங்களின் முதன்மையான கதைத் தலைவனைப் போன்ற பணியை நாம் தேர்ந்தெருக்க வேண்டும். அதாவது, நம் நாட்டில் புதிய தளவாடங்களின் ஆற்றலைப் பின்புலமாகப் பெற்றிருக்கும் பணி நடைமுறைகளினால் அமைப்பாக உருவாக்கப்

159