பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • சோவியத்து எழுத்தாளரின் படைப்பு, நமது காலத்தின் பெரிய, அனைத்துலக நோக்கங்களினால் ஒளியூட்டப்படவில்லையெனில், எந்தப் பொருளுமற்றதாகும். அலெக்சாண்டர் பெதயேவ்
  • கலையில் தேசிய வடிவம் என்பது எதனைக் குறிக்கிறது: முதன்மை யாகப் பழங்குடிப் பேச்சு என்பதையே அது குறிக்கிறது. நாட்டின் தனித்தன்மை கொண்ட, பல நூற்றாண்டுகளாக நாடு நாட்டுப் புறக் கதைகளைத் தன்னுள் ஏற்றுக் கொண்ட, பேச்சு நடைமுறை உணர்வு ஆகியவற்றையும் அது குறிக்கிறது.

அலெக்சாண்டர் பெதயேவ் * கலையென்பது அறிவியல் போன்றதன்று. அது நாட்டுணர்வைக் கொண்டிராவிடின், வற்புறுத்தல் நிறைந்ததாக இருக்க அதனால் இயலாது. உலகக் கலையெண்பது என்னவென நீ கேட்கலாம். ஆம். ஆனாலும், அதனுடைய அனைத்துலகத் தன்மை, தவிர்க்க

இயலாதபடி தேசிய உடைகளால் போர்த்தப்பட்டுள்ளது.

இவான் குரம்சோகி

  • குறுகிய மனப்பாண்மையற்ற பரந்த மனப்பாண்மையென்பது அறிவற்றதாகும், அத்தகையவன் எதுவுமற்றவண், எதுவுமற்ற வனை விடக் கீழானவன். தேசிய அடையாளமற்ற கலை, உண்மை, வாழ்க்கை என்று எதுவுமே இருக்க இயலாது.

இவான் துர்கனேவ் * மக்களின் விருப்பங்களின் எடுத்துக் கூறும் பேச்சாளனாக இருப்ப துடண் மக்களின் தலைவனாகவும், பாதுகாவலனாகவும் எழுத்தாளன் இருக்க வேண்டும். நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • கவிஞன், சிற்பி, கலைஞண் போன்றே இசையமைப்பவனும் மனிதனுக்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டுமென்ற கோட் பாட்டை நான் கொண்டிருக்கிறேன். மனித வாழ்க்கையை அவன் அழகுபடுத்திப் பாதுகாக்க வேண்டும். கலையில் அவனது முதன் மையான கடமையெண்பது ஒரு குடிமகனாக இருப்பதென்பதே யாகும். சொஜி புரோகோயில்

162