பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • தனது கதைமாந்தர்களின் கவர்ச்சியினால், இலக்கியம் மனிதனின் செயல்பாடு, உழைப்பு ஆகிய அனைத்துத் துறைகளுக்கான பாதையை ஒளிமயமாக்குகிறது. இந்தக் கருத்திஐடிப்படையில், மக்கள் தங்கள் தொழிலைத், தங்கள் வாழ்க்கிைப் பணியைக் காண அவர்களுக்கு உதவி அவர்களை இயக்கவல்லதாக இருப்ப தாகும் அது. அலெக்சாண்டர் பர்தோவ்ஸ்கி
  • கலைஞருக்கு அறிவியலாளருக்குத்தாளிகையாளருக்கு ஒவ்வொரு வருக்கும் அனைவருக்கும் பொதுவான ஒரு பெரிய விதி உள்ளது. கருத்து முதலில் வருகிறது. இந்த விதியை மீறுபவர்கள், மக்களுக்குப் பயன் நிறைந்தவர்களாக இருப்பதற்கான ஆற்றலை உடனே இழந்துவிடுவதுடன், அருவருக்கத்தக்க ஒட்டுண்ணிகளாக மாறி விடுகின்றனர். திமிட்ரி பிசரேவ்
  • புதிய கருத்துகளினூடே மட்டுமே நண்மை பயக்க இலக்கியத் தினால் இயலும். அதுவே அதனுடைய உண்மையான தொழி லாகும். இதில் எந்த ஒரு போட்டியாளரையும் அது பெற்றிருக்க வில்லை. திமிட்ரி பிசரேவ்
  • சோவியத்துப் படிப்பாளி என்பவர் பேரறிவு, அறிவுக்கருத்துகளைப்

புத்தகங்களில் தேடிப் பெறும் ஒரு படிப்பாளியாவார்.

ஆண்டன் மெகரன்கோ

  • சிந்தனை மனப்பாங்கெண்பவை தொழில் நுட்பத்திற்குத் தீங்கே தும் விளைவிக்காததுடன், அதனுடைய முன்னேற்றத்தைத் துண்டவும் செய்கின்றன. வி.வி.வெரெசெச்சாகின்
  • கலைஞன் வரலாற்றாசிரியனாக, மெய்யியல் ஆசிரியராக, அரசியல்வாதியாக, அமைப்பாளராக, வருமுண் உரைப்பவராக இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். கலைஞன் மனித இனத்தின் உள்ளுயிர் உலகை வடிவமைக்கும் கட்டிடக் கலைஞ னாவான். ஏ.என்.தோல்கதாய்

163