பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • இளம் வயது முதலே பிற குழந்தைகளுடன் வாழ்விலும், விளை யாட்டிலும், பணியிலும் தண் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ளும் சூழ்நிலைகளில் குழந்தைகள் வைக்கப்பட வேண்டும். என்.கே.குருப்ஸ்கயா
  • ஒரு குழுவில் மட்டுமே குழந்தையின் தனித்தன்மை, ஆளுமை முழு

அளவில், இணக்கமாக வளர இயலும்.

என்.கே.குருப்ஸ்கயா

  • குழந்தைகளின் கூட்டு வாழ்க்கை மகிழ்ச்சியான செயல்பாடுகளால் நிரப்பப்பட்டிருக்க வேண்டும்; அப்போதுதான் அது வலிவுடன் வளர்க்கப்பட்ட சமுதாயச் சிந்தனையை, உணர்வைப் பதிக்கச் செய்கிறது. என்.கே.குருப்ஸ்கயா
  • கல்வி கற்பதில், கற்பித்து உருவாக்குபவரின் தனிப்பட்ட ஆளுமைத் தண்மை என்ற நிலைக்கே அனைத்துச் செய்திகளும், பொருள் களும் கொண்டு செல்லப்படுகின்றன. திமிட்ரி பிசரேவ்
  • ஒரு தனிப்பட்ட மனிதரின் தனிப்பட்ட ஆளுமைத் தன்மையை உண்மையாக மதிப்பவர், தன் நான் என்பதை உணர்ந்தவராக ஆகி, சூழ்ந்துள்ள உலகுடன் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளும் அந்த நிமியம் முதல் அவரை அவரது குழந்தைப் பருவம் முதலே மதிக்க வேண்டும். திமிட்ரி பிசரேவ்
  • ஒரு குழந்தை திட்டப்படும்போது, அடிக்கப்படும்போது, துன்புறுத்தப் பரும்போது, அதன் இளமைப் பருவம் முதல் தனிமையையே அது உணர்கிறது. திமிட்ரி பிசரேவ்
  • குழந்தை வளர்ப்பு வெற்றி நிறைந்ததாக இருக்க வேண்டு மெனின், அனைத்து வளர்ந்தவ்ர்களும் தங்களது வளர்ச்சியை யும் முடிவற்று மேற்கொள்வதில் அக்கறை கொண்டவர்களாக இருக்க வேண்டும். இலியோ தோல்கதாய்

169