பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

குழந்தைகளின் முலம் அவர்கள் ஏமாற்றத்தை அடிக்கடி சந்திக்க நேர்கிறது. ஆண்டன் ருபின்ஸ்டின்

  • குழந்தைகளிடம் காணப்படும் குறைகளையும் தவறுகளையும் களைவதிலான கவனத்தைக் குறைத்துக் கொண்டு, வளமான அன்பினால் அவர்களை நிறைவடையச் செய்வதில் அதிக கவனம் செலுத்து, அண்பு எங்கு இருக்கிறதோ, அங்கு தவறுகள் இருக்க மாட்டா. நல்லதை விதைக்காமல், கெட்டதைக் களைய முயல்வது பயனற்றது. அது ஒரு வெற்றிடத்தை உருவாக்கு கிறது, ஒரு வெற்றிடம் எப்போதும் வெறுமையினாலேயே நிரப்பப்படும், ஒன்றை வெளியேற்றினால், அதற்கு மாற்றாக வேறொன்று வரும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • குழந்தை வளர்ப்பின் தொடக்கத்தில் அது ஒர் அலுவலராகவோ, கவிஞராகவோ, கலைஞராகவோ காணப்படாமல், மனித உயிராகவே காணப்படுவதுடன், பிற்காலத்தில் மனிதப் பிறவி என்ற நிலையை இழக்காமல், அதுவாகவோ இதுவாகவோ, ஏதோ ஒன்றாகவோ குழந்தை ஆகும்படியே காணப்படவேண்டும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • குழந்தையின் சேட்டைகள் துன்பமளிக்காதவாறும், அதன் சிரு முஞ்சித்தனத்தால் உடல் அல்லது ஒழுக்கம் களங்கப்படுத்தப்படா மல் உள்ளவரை, குழந்தை குறும்பு செய்வதாகவும், முறை தவறி நடப்பதாகவும் இருந்தாலும் விட்டு விரு. சோம்பல் அல்லது இயக்கமற்றதை விட இழிவானது வேறெதுவுமில்லை எண்ப தால், குழந்தை முட்டாளாகவோ மந்தமாகவோ இல்லாதவரை, அது குறும்புக்காரனாகவும், மூர்க்கமானவனாகவும் இருந்தாலும் இருக்கட்டும், விட்டு விரு. விசாரியோன் பெலின்ஸ்கி
  • தனது குழந்தையிண்பால் ஒரு தாயின் நடவடிக்கை, பழக்க வழக்கம் சரியானதாக இருக்கத் தேவையான கல்வியைத் தாய் பெற வேண்டும். இவ் உலகில் உள்ள அனைத்து நல் எண்ணங் களையும் அண்பையும் அறியாதவளாப் இருக்கும் ஒரு தாய்

மிக வறிய ஒரு வழிகாட்டியாகவே இருப்பாள்.

இலியா மெச்சின்கோ

173