பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்





“நீ செய்யலாம்”, “நீ செய்ய வேண்டும்”, “நீ செய்யக் கூடாது” என்பவை பற்றிய எண்ணங்களை நமக்கு நாமே தெளிவாக விளக்கிக் கொள்ளவும், நமது விருப்பங்களைக் கட்டுப்படுத்த வும், குழந்தைப் பருவத்திலிருந்தே நமக்குக் கற்பிக்கப்படவில்லை என்ற உண்மையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை யாக நமது பல தொல்லைகள் உள்ளன.

வாசிலி ககோம்லின்ஸ்கி

உண் குழந்தைகளைப் பற்றி மக்கள் கெட்டபடி பேசினால், உண்னைப் பற்றி கெட்டபடி அவர்கள் பேசுவது என்பதையே அது குறிப்பதாகும். வாசிலி சுகோம்லின்ஸ்கி

குழந்தைப் பருவம் என்பது ஒரு முடிவற்ற விருமுறையாக இருக்கக் கூடாது. குழந்தை செய்யக் கூடிய வேலை குழந்தைக்குக் கொருக் கப்படாவிட்டால், வேலை அளிக்கும் இன்பத்தை அது பெறுவதைத் தவிர்த்துவிடுவதாகும். வாசிலி சுகோம்லின்ஸ்கி

காவலாளியிலிருந்து அமைச்சர் வரை எந்தப் பணியாளரும், அவரைவிடச் சிறந்தவராலோ மோசவானவராலோ மாற்றி அமர்த்தப்படலாம். ஒரு நல்ல தந்தை என்பவர், அவரைப் போலவே நல்லவராக உள்ள வேறு ஒரு தந்தையால் மாற்றி அமைக்க இயலாது. வாசிலி சுகோம்லின்ஸ்கி

தண்னைச் சூழ்ந்துள்ள உலகத்தின் கருத்துகள், எண்ணங்கள் என்னும் ஆர்வமளிக்கும் நீரோடையைத் தன்னுள் உள்வாங்கிக் கொள்ள வழிவிரும் மாபெரும், ஒளி படைத்த சாளரம் என்பது விளையாட்டே. ஆவல், துணிவான முயற்சி என்னும் ஒளிப் பிழம்பை ஏற்றி வைக்கும் தீச் சுடர் விளையாட்டேயாகும்.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

தண்டனை அளிக்கும் குச்சியைப் பயண்படுத்துபவனைக் குழந்தை வெறுக்கிறது. வாசிலி சுகோம்லின்ஸ்கி

சிறு கொரு மையோ, பெருங்கோபமோ, வேண்டு கோளோ, துண்டுதலோ இன்றி, அமைதியான தீவிரமான படிப்பினை

175