பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •o த. கோவேந்தன்

என்பதே குரும்ப ஒழுக்க நுட்பத்தின் வெளியே தோன்றும் வெளிப் பாடாக இருக்க வேண்டும். கூட்டமைப்பின் ஏற்கப்பட்ட ஒரு முத்த உறுப்பினர் என்ற உரிமையில், அறிவுரைகள் வழங்க நீ உரிமை பெற்றிருக்கிறாய் எண்பது பற்றிய அய்யப்பாடு உனது மனத்திலோ, குழந்தைகளின் மனத்திலோ எழக் கூடாது.

ஆண்டன் மெகரன்கோ

  • தங்களின் குழந்தைகளைக் கெட்ட வகையில் வளர்த்து வரும் பெற்றோர்களும், பொதுவாகக் கற்பிக்கும் கலை பற்றிய எந்தத் தந்திரத்தையும் அறிந்திராத மக்களுமே, கல்வித் தலைப்புகளைப் பற்றிய பேச்சுகளின் இன்றியமையாத தன்மையை மிகைப் பருத்திக் கூறுபவர்கள். ஆண்டன் மெகரன்கோ
  • பெற்றோரின் வாழ்க்கை, பணி, அவர்களது சமுக அடையாளம், அவர்களின் நடவடிக்கைகள், பழக்க வழக்கங்கள் ஆகியவையே

பெற்றோர்களின் அதிகாரத்திற்கான அடிப்படைகளாகும்.

ஆண்டன் மெகரன்கோ

  • உன் குழந்தைகளுக்குச் சொற்பொழிவாற்றும் போதும், அறி வுரைகள் வழங்கும்போதும் மட்டுமே நீ குழந்தைகளை வளர்ப் பதாக எண்ணாதே. உனது வாழ்வின் ஒவ்வொரு கணமும் நீ வளர்த்து வருகிறாய். குரல் ஒலியில் ஏற்படும் சிறிய மாற்றத் தையும் குழந்தை அறிந்து கொள்ளும். உனது சிந்தனையின் அனைத்துத் திருப்பங்களும், குழப்பங்களும், நீயே அறிந்திராத கண்ணுக்குப் புலப்படாத பாதைகளில் அவர்களை அடைந்து விரும். ஆண்டன் மெகரன்கோ
  • தங்களின் குழந்தைகளை இன்று வளர்ப்பதன் முலம், பெற்றோர் கள் நமது நாட்டின் வருங்கால வரலாற்றையும், அதன் முலமாக

உலக வரலாற்றையே படைப்பவர்கள் ஆகின்றனர்.

ஆண்டன் மெகரன்கோ

  • நம் குழந்தைகளே நமது முதுமைக் காலமாகும். ஒரு நல்ல வளர்ப்பு என்பது ஒரு மகிழ்ச்சி நிறைந்த முதுமைக் காலத்தைத்

176