பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

அறியாமை, அன்பில் கொண்டுள்ள வெறியினைப் போலவே,

மக்களுக்கு அதிகத் துயரத்தையும், சமுகத்திற்கு அதிகத் தீங்கையும் விளைவிப்பதாகும். வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • அனைத்து உயிர்களிலும் அற்புதம் நிறைந்ததும், நாம்பெற்றுள்ள அனைத்துக்கும் கடன்பட்டவர்களாக இருப்பதும் . நமது தாயே. நிகலாய் ஒய்ட்ரோவ்ஸ்கி
  • உனது உணர்வுகளில் உனது தாயும் உனது உறவாவது, அரிதான நற்பேறாகும். மாக்சிம் கார்கி
  • உலகத்தில் அனைத்துப் பெருமைகளும் நமக்கு நமது தாய்களிட மிருந்தே வருகின்றன. ஞாயிற்றின் ஒளியின்றிமலர்கள் மலராது. அன்பின்றி மகிழ்ச்சி குடி கொண்டிருக்க இயலாது, பெண்ணின்றி அன்பு நிலைத்து வாழ இயலாது, ஒரு தாயிண்றி எந்தக்கவிஞனோ கதை மாந்தனோ இருக்க இயலாது. மாக்சிம் கார்கி
  • யாருடைய அன்பு எந்தத் தடையையும் பொருட்படுத்தவில்லை யோ, யாருடைய மார்பு இந்த உலகம் முழுதையும் வளர்த்ததோ, அந்தப்பெண்ணை, அந்தத்தாயைப்போற்றிவணங்கு மனிதனுள் உள்ள அழகு நிறைந்தவை அனைத்தும்,செங்கதிர்களிலிருந்தும் தாயின் அண்பான அரவணைப்பிலிருந்தும் பெறப்படுபவை ஆகும். மாக்சிம் கார்கி
  • தனது முன்னோர்களிடம் மதிப்பற்று இருப்பது எண்பது

கயமையின் ஒர் இன்றியமையாத அறிகுறியாகும்.

அலெக்சாண்டர் பூஉழ்கின் * ஒரு வளரும் குழந்தை தனது பெற்றோரையும், உடன் பிறந்தோரை யும், தனது பள்ளியையும், தனது நாட்டையும் நேசிக்கக் கற்றுக் கொள்ளவில்லையெனில், ஆழ்ந்த பேராசை படைத்த தன்னலம் அவனது குணநலன்களில் பதிந்திருக்குமேயானால், அவன் தேர்ந்தெடுத்த பெண்ணின் மீது ஆழ்ந்த அண்பைச் செலுத்த இயலாதவனாகத் தான் இருக்க முடியும். ஆண்டன் மெகரன்கோ

185