பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • தங்களின் ஒரே தகுதி என்பது எதையுமே செய்யாமல் இருப்பது

எண்ணும்படியாக இருப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர்.

வி.ஏ.குளுசெல்ஸ்கி * கற்கும்போது உனது பாடங்களை நினைவில் வைத்திருப்பதற் காக நீ அவற்றைத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துப் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் நீதியியலில் உனது தவறுகளைத் திரும்பத் திரும்ப நீ செய்யாமல் இருக்க அவை களை நீ நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்.

வி.ஏ.குளுசெஸ்எல்கி * தவறுகளைப் பற்றி அச்சம் கொண்டிராதே. ஏனெனில் அவை தவிர்க்க இயலாதவை எண்பதால். மாக்சிம் கோர்கி

  • உன்னைக் கண்டு நீயே நகைக்கத் தயங்காதே. துய்மைப்படுத் திக் கொள்வதைப் போல, தன் திறனாய்வும் இன்றியமையாததே. மாக்சிம் கோர்கி
  • தவறுகள் மனத்திற்குப் படிப்பினைகளைக் கற்றுத் தருகின்றன. இலியோ தோல்கதாய் * ஒரு தவறு நேர் செய்யப்பட இயலாததாக ஆகிவிடுவதைவிட,

அதனை ஒப்புக் கொள்வதே மிகவும் சிறந்ததாகும்.

இலியோ தோல்கதாய் * மற்றவர்களிடம் சொல்லப்பரும் ஒரு பொய், செய்திகளைக் குழப்ப மட்டுமே செய்யும் எண்பதுடன், ஒரு தீர்வினைத் தாமதிக்கவும் செய்யும், உண்னிடம் நீயே உண்மையைப் போல் மறைத்து கூறிக் கொள்ளும் ஒரு பொப், உனது வாழ்க்கையையே அழித்துவிடும். இலியோ தோல்கதாய் * தவறுகள் என்பவை படிப்பினைகள் ஆகும். அவை நமக்குக் கற்பிக் கின்றன. அவை உண்மைக்குக்கொண்டு சேர்க்கும் பாதையாகும். தவறுகளுக்காக அஞ்சுவதென்பது தவறானது. அவற்றிலிருந்து

படிப்பினைகளை நாம் கற்றறிந்து கொள்ள வேண்டும்.

எம்.என்.ஸ்டெபடோவா

191