பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. க்ோவேந்தன்

  • முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டுவிட்ட தவறுகளை மறுபடியும் திரும்ப நினைவுப்படுத்திக் கொள்வதென்பது, அதற்காகக்

குறிப்பிட்ட ஒரு காரணம் இருந்தாலன்றி, தவறானது.

வி.இ. இலெனின்

  • ஒருங்கிணைந்து பணியாற்றுவதென்பது, குறை கூறப்பரு வதைப் சரியான உணர்வுடன் ஏற்றுக் கொள்வதும் மற்றவர்

களின் தவறுகளைப் பற்றி குறைகூறத் தயங்காததும் ஆகும்.

என்.டி.ஜெலன்ஸ்கி

  • ஒரு நோயை நீ குணப்படுத்த வேண்டுமெனில், முதலில் அதன் காரணத்தைச் சரியாகக் கண்டறிந்து அதனை வெளிப்படுத்த வேண்டும், அதுதான் தீவிரம் மிகுந்த, பயன்மிக அளிக்கக்கூடிய வழியாகும். பெலிக்ஸ் ஜெர்சென்ஸ்கி
  • ஒரு கேட்டின் காரணத்தைக் கண்டறிவதென்பது, அதற்கு மாற்றைக்

கண்டு கொள்வது போலவே நெருங்கிய நன்மை பயப்பதாகும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • ஏதோவொன்றில் ஒரு குறையைக் கண்டுபிடிப்பதென்பதனால்

மட்டுமே, இந்த ஒன்று தவறானது என்று கூற இயலாது.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • மற்றொருவரின் செயல்களைப் பற்றி கடுமையாக திறனாய் பவர், அதனை இன்னமும் நன்றாகச் செய்யும் பொறுப்பை ஏற்றுக் கொள்கிறார். விசாரியோன் பெலின்ஸ்கி
  • என்னுள்ளே இல்லாத, மற்றவர்களிடமாவது இருக்கக் கூடிய ஒரு தவறான கருத்தினைப் பொறுத்துக் கொள்வதை, ஏற்றுக் கொள்ள எண்னால் இயலுமென்றாலும், இழிதண்மையைப் பொறுத்துக் கொள்வது என்பதை மட்டும் என்னால் எப்போதுமே ஏற்றுக் கொள்ள முடியாது. விசாரியோன் பெலின்ஸ்கி