பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் or த. கோவேந்தனர்

  • அனைத்துமே அமைதியாகவும், முறையாகவும் இருந்து, பண் பாடு கொண்ட பாராட்டுகளையும், தலையசைப்பையும் பெற்றிருந் தால், அங்கு நேர்மையின்மை, ஏமாற்று, அறியாமை ஆகியவை நிறைந்திருக்க எல்லையற்ற வாய்ப்பு இருக்கவே செய்யும்; குற்றம் சாட்டப்படவோ, உண்மையென்னும் எச்சரிக்கை சொல்லைப்

பற்றிப் பேசவோ அங்கு எவரும் இருக்க மாட்டார்கள்.

விசாரியோண் பெலிண்ஸ்கி

  • முகத்திற்கெதிரே தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு அனைத்துக் கேடுகளையும் நீக்கியதாக இருக்க வேண்டும். அதுவே நமது துய்மை, வலிமையின் மிகச் சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

விளாடிமீர் மாயாகோவ்ஸ்கி * குறைகூறி திறனாய்வது எண்பது நல்ல உடல்நலம் மிக்க குருதி ஒட்டத்தைப் போன்றது. அது இல்லையெனில் வீக்கம் நிறைந்த உடல்நலமின்மை என்பது தவிர்க்க இயலாதபடி அங்கு இருக்கவே செய்யும். நிகலாய் ஓஸ்ட்ரோவ்ஸ்கி

  • திறனாய்வு என்பது தவற்றின் ஒர் இடரான எதிரியும், புரட்சிகர மான அறிவுரையென்றாலும், ஏமாற்றுதல் எண்பதின் எதிரியும் ஆகும்; உண்மை என்னும் நம்பிக்கை மிக்க தூணாகும் அது. அது, அதன் தாயும், செவிலியும், நண்பனும் பாதுகாவலரும் ஆகும். உண்மை யென்பது திறனாய்வு எண்பதன் மீதே நிலைத்து வாழ்வது ஆகும். ஜி.வி.பிளக்கனோவ்
  • திறனாய்வு என்பது செயல்களின் சாதனைகளையும் குறை களையும் வெளிப்படுத்துவதால்,பேரறிவாளருக்கும் அது தேவை யானதே. என்.ஏ. பெஸ்குசேவ்
  • அழுகிய மனம் படைத்தவன் மட்டுமே திறனாய்வினால் தொடப் பட அஞ்சுவான். காற்றடிக்கும்போது மண்ணில் வீழும் எகிப்திய

பதப்படுத்தப்பட்ட பிணம் போன்றவண் அவன்.

திமிட்ரி பிசரேவ்

201