பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξ த. கோவேந்தனர்

  • மனிதன் தனது இரு கால்களாலும், இரு கைகளாலும் இயங்கி நடந்து செல்லும் ஆற்றலை அவனுக்கு இயற்கை அளிக்க மறந்து விட்டபோது, நோக்கமெனும் ஒர் ஊன்றுகோலை அவன் சார்ந்து கொள்ள அளித்துள்ளது. அப்போது முதற் கொண்டே அவன் தண் நினைவின்றி ஒரு முன்னேற்றமான உலகைப் படைக்கப் பாடுபடத் தொடங்கிவிட்டான். மாக்சிம் கோர்கி
  • நோக்கத்தினால் கடையப்பட்ட பின்னும், இன்னமும் உருப்பெறாத நிலையில் இருந்தாலும், அடைய இயலக் கூடியதாக மனத் தினால் முன்னமேயே கற்பிக்கப்பட்டுக் காட்சியாக்கப்பட்டுள்ள பழுதற்ற நிறைவினையே வாழ்க்கை தேருகிறது.

மாக்சிம் கோர்கி

  • நோக்கத்தின் மீது கொண்டுள்ள நேயம் என்பது ஈகம் என்பதை நோக்கி எல்லையற்றுத் தீவிரமாகச் சார்ந்திருக்கும் ஒரு துடிப் பான உணர்வாகும். மாக்சிம் கோர்கி
  • ஒரு நோக்கத்தினால் தூண்டப்பட்டதாக இல்லையெனின், ஒரு

மனிதனின் பணி இழிவானதாகவே இருக்கும்.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • தெளிவான, உள்ளுணர்வு கொண்ட கோட்பாடுகள் ஒரு மனிதனுள் சமூகத்தின் செல்வாக்கினாலோ இலக்கியத்தின் துணையினாலோ

உருவாக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • ஒரு தனிப்பட்ட மனிதன் வலிமை மிகுந்த கோட்பாடுகளைக் கொண் டிருக்க வேண்டும். அத்தகைய கோட்பாடுகள் எதுவுமற்றவர் களைத் தவிர அனைத்து இதர மக்களும் தங்கள் கோட்பாடுகளை வளர்த்துக் கொண்டு பரப்பச் செப்கின்றனர். அத்தகைய கோட் பாடு எதுவுமற்று நீ இருப்பதற்கு ஒன்று நீ முடனாக இருக்க

வேண்டும் அல்லது நேர்மையற்றவனாக இருக்க வேண்டும்.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி