பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் $or த. கோவேந்தன்

  • நீ சரியாகச் செயல்பட்டுப் பயன்நிறைந்தவனாக இருப்பதற்கு நேர்மையானவனாக இருந்தால் மட்டும்போதாது, ஆனால் நிலை யான, தொடர்ந்த சிந்தனையினை நீ பெற்றிருக்க வேண்டுமென் பதும் இன்றியமையாததாகும். நிகலாய் செர்னிசேவ்ஸ்கி
  • பெருந்தன்மையான நோக்கங்களின்றி மனித இனம் நிலைத்து உயிர் வாழ்ந்திருக்க இயலாது. பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி
  • அன்பு என்பது இல்லாவிட்டால், மனித இனத்தின் அனைத்து எதிர் பார்ப்புகளிலும், அனைத்து உழைப்பிலும் ஏற்படக் கூடிய பயன் எண்னவாக இருக்க முடியும்: மைக்கேல் லெர்மோண்தோவ்
  • ஒரு நோக்கத்தைப் பெற்று உயிர்வாழ்ந்து இருப்பவன், அவன் தண் நோக்கத்தை கைவிட்டு விட்டாலன்றி, பயனற்றவனாக இருக்க இயலாது. பெலிக்ஸ் ஜெர்ஜென்ஸ்கி
  • உனது கோட்பாடுகளைத் தெரிவிப்பதற்குத் தேவையான துணிவைப் பெற்றிரு. இவான் செச்சனோவ்
  • ஒரு கோட்பாடு எண்பது உண்னுடையது எண்பதற்காக அன்றி. அதன் பல்வேறுபட்ட தன்மைகளுக்காகப் போற்றிப்பாதுகாக்கப்பட வேண்டும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • தனது கருத்துகளுக்காக உறுதியாக நிற்க முடியாதவன், அவனது மனசான்றுக்கு ஒர் இரண்டகனாவான். விசாரியோன் பெலின்ஸ்கி
  • மக்கள் உண்மையான, ஆழமாய்ப் பதிந்த, தன்னலமற்ற கோட்பாடு களைப் பெற்றிருக்க இயலும் என்பதை நீ மறுப்பாயேயானால், நீயே உண்னுள் எத்தகைய கோட்பாடுகளையும் பெற்றிருக்க வில்லையென முடிவு மேற்கொள்வதற்கான அனைத்துக்காரணங் களையும் நாண் பெற்றிருப்பேன். நிகலாய் தோப்ரோலியுபோவ்

207