பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • சோவியத்து நிறுவனங்களின் பொறுப்பு பற்றிய கேள்விகள் அனைத்துக்கும் கூட்டுக் கலந்துரையாடல், மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் பற்றி, சோவியத்துப் பதவியில் இருக்கும் ஒவ்வோர் ஆளும் ஆற்றி முடிக்க வேண்டிய குறிப்பிடப்பட்ட செயல்கள், நடை முறை வேலைகள் பற்றித் தெளிவாகவும், குறிப்பாகவும் தெரிவித்து, அவர்களது பொறுப்பை வரையறுக்கும் முறையும் இணைந்தே செயல்படுத்தப்பட வேண்டும். வி.இ.இலெனின்
  • நமது கவனத்தையெல்லாம் நாம் ஆற்றி முடிக்க வேண்டிய பணி களில் செலுத்த வேண்டுமேயன்றி, தீர்மானங்களில் செலுத்தக் கடாது. வி.இ.இலெனின்
  • மனிதர்களை நண்காய்ந்து, உண்மையிலேயே என்ன செய்யப் பட்டுள்ளது என்பதைச் சரி பார்ப்பது என்பது, ஒன்று மட்டுமே நமது முழுமையான கொள்கை, நமது அனைத்து நடவடிக்கை களின் இன்றியமையாத பகுதியாக அது இப்போதிருக்கிறது. இது ஏதோ ஒரு சில மாதங்களுக்கான அல்லது ஒரு சில ஆண்டுக் கான பணியல்ல பல ஆண்டுகளுக்கானதாகும். வி.இ.இலெனின்
  • அதிகார வகுப்பின் கேடுகளை நீக்கி மீள்வது என்பதற்குப் பல , பத்தாண்டுகள் பிடிக்கும். அது கடினம் மிகுந்த ஒரு போராட்டம். . அதிகார வகுப்பிற்கெதிரான மேடை முலம், அதிகார வகுப்பு நடைமுறைகளை இரவோரு இரவாகக் களைந்துவிட நம்மால் இயலுமென எவர் ஒருவராது சொல்வாரேயானால், அலங்காரச் சொற்களில் நாட்டம் கொண்ட போலியான தற்பெருமைக்கார ராகத்தாண் அவர் இருப்பார். வி.இ.இலெனின்
  • விதிக்கருமை (சிவப்பு நாடா) என்பது சிக்கலின் தண்மையினை நீ புறக்கணித்து விட்டு உனது கவனமெல்லாம் தாளின் மீதும், படிவத்தின் மீதும் வைத்து இருப்பதுதான்.

-- - என்.கே.குருப்ககயா

19