பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • ஒழுங்குமுறை இல்லையேல், ஒற்றுமை எண்பது இருக்க முடியாது. ஒற்றுமை என்று ஒன்று இல்லையேல் அமைப்பு என்ற ஒன்று இருக்கவும் முடியாது. திமிட்ரிபிசரேவ்
  • உரிமை என்ற கருத்து எப்போதும் உண்மை என்ற கருத்துடன் கலப்பதாக இருப்பதாலும், பொது நலத்திற்குப் பாரு பட வேண்டிய பொறுப்பினை அது தூண்டிவிடுவதாலும், ஒரு நாட்டின் பொருளுள்ள உரிமை மிக அதிகமாக மதிக்கப்படு வதாகவும், சட்டத்தின் ஆட்சி வலிமை மிகுந்ததாகவும் . மக்கள் தங்கள் சமுகக் கடமைகளை மிக முழுமையாக ஆற்றுபவர்களாக வும் இருக்கச் செய்யும். மைக்கேல் குட்டேர்கா
  • நமது சமுதாயத்தில் ஒழுக்கம் என்பது ஒர் அறமாகவும் பின்னர்

அதே நேரத்தில் ஒர் அரசியல் கோட்பாடாகவும் உள்ளது.

ஆண்டன் மக்காரெண்கோ

  • சட்டத்திற்குக் கீழ்ப்படியவும், ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வும் சமநீதி சமுதாயத்தின் நடைமுறைச் சட்டங்களைப் பின்பற்றவும் கற்றுக் கொள். உலகின் மிக உயர்ந்த மனிதநேய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது என்பது, உரிமை உணர்வை மிகச் சிறந்த முறையில் வெளிப்பருத்துவது ஆகும். வாசிலி சுகோம்விங்ஸ்கி
  • உண்மையில் உரிமையராக இருப்பவர் யார்? யார் தங்களது விருப்பு, வெறுப்புகளை மற்றவர் மீது திணிக்க முற்படாமல் உள்ளனரோ அவர்தாம். பியோடோர் கிளிண்தா
  • தூய சுதந்திரம் என்பது விடுதலையாகாது. ஆனால் அது மற்றவர்களையே எப்போதும், எதற்காகவும் சார்ந்து இருக்காம லிருக்கும் ஒரு கலையேயாகும். பி.ஏ.பெடோடோவ்
  • பொதுவான வரையறைகளிலிருந்தும், வெறுப்புகளிலிருந்தும் ஆக்க நிறைவான சிந்தனையை விருவிப்பது என்பதே இந்தப்

211