பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • நான் எப்போதுமே எனது சீற்றத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, ஒரு சச்சரவில் விட்டுக் கொடுத்து, அதன் முலம் நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவே செய்துள்ளேன்; அதனால் புழுதி யெல்லாம் அடங்கியபின், சிக்கல்கள் எல்லாம் தாங்களாகவே தங்கள் சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டன. அந்தச் சச்சரவு தொடங்கப்பட்டவுடனே நிறுத்தப்படாததற்கு வருந்தத்தக்க ஒரு நிலைக்கு ஒருவர் வருவது பெரும்பாலும் தவிர்க்க இயலாததாகும். இலியோ தோல்கதாய்
  • நமது சீற்றம் தணிந்தபின், நமக்கே வேடிக்கையாகத் தோன்றுபவை பற்றி நம்முன் சீற்றத்தை உருவாக்கியவரை, சீற்றத்தின் வேகத் திலேயே நாம் குற்றஞ்சாட்டுகிறோம்.

காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • முட்டாள்தனமாக இருக்கும் ஒரு நிலையும், கட்டுப்படுத்த இயலாத சீற்றமும், முட்டாள்தனமாக ஒர் இரக்கம் அல்லது மென்மைத் தண்மையைப் போன்றே அழிவைத் தருவனவாகும்.

காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • கரும்சினம் என்பது எப்போதுமே முறையற்றது; பெரும்பாலும்

ஒரு தகுதிபடைத்த நோக்கத்திற்குப்பாடுபடுவதை அது இருளாக்கி அனைத்தையுமே குழப்பமடையச் செய்யும், நிகலாய் கோகோவ்

  • அமைதியாயிருத்தலே பெருஞ் சீற்றத்தைவிட வலிமை படைத்த

தாகும். மைக்கேல் ஸ்வட்லோவ்


  • செயல்படாமை என்னும் வழக்கமானது, அனைத்துப் பெருங் கேடுகளிலும் மிக இழிந்ததாகும். இலியோ தோல்கதாய்