பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • தற்பெருமை பேசுவது என்பது எப்போதுமே இழிவானதாகும்.

பியோடர் செய்கோவ்ஸ்கி

  • ஒருவன் தன்னை உடலால் உயர்த்திக்கொள்வதைவிட அதிகமாக

அவன் உயர்ந்திருக்க இயலாது, இதற்கு மாறாகத் தன்னைப் பற்றித் தானே புகழ்ந்துரைத்துக் கொள்ள மேற்கொள்ளப்பரும் எம் முயற்சியும், மற்றவர் பார்வையில் அவனை இழிவுபடுத்து வதாகவே இருக்கும். லியோ தோல்கதாய்

தன்னிடம் மறைந்திருப்பதாகத் தனது தற்பெருமையால் பிதற்றிக் கொள்ளும் ஆற்றல்களைப் பற்றிய ஒர் அடிமைப்படுத்தும் பாராட் குரையினை, ஒரு வலிவற்ற வெற்று மனிதன் கேட்கும் போது, அவன் ஏமாற்றுதலுக்கு ஆட்பட்டுத் தன்னையும் தனது செயல் களையும் நுணுக்கமாக் மதிப்பிட அவனிடமிருந்த சிந்தனை ஆற்றலையும் இழந்துவிடுகிறான். திமிட்ரி பிசரேவ்

சமுகத்தைப் பொறுத்தவரை, அறிவற்ற, தன்னையே நிறைவு செய்து கொள்ளும் ஒருவன், வளர்ந்துவிட்ட ஒரு புற்றுநோ யினைப் போன்றவண். மாக்சிம் கோர்கி

அனைவரது கவனத்தையும் தண்பால் ஈர்க்க ஒரு மனிதன் மேற் கொள்ளும் முயற்சிகள் அவனுக்குக் கேடு பயப்பவையேயாகும், ஏனெனில் வியந்து, தான் பாராட்டப்பட வேண்டுமென்ற விருப் பத்தைப் போல் வேகமாக ஒருவனது உள்ளுயிரை அழிப்பது வேறெதுவுமில்லை என்பதால்தான். மாக்சிம் கோர்கி

உள்ளுறை பண்பற்றதன்மை, பெரும்பாலும் வெளியே தோற்ற மளிக்கும் பண்புடமை என்ற ஒரு பூச்சினால் வெகு திறமையாக மறைக்கப்பருவதாகும். மாக்சிம் கோர்கி

  • வீரத்தைப் பற்றி அதிகமாகப் பேசுபவர்களாகக் கோழைகளும்,

பண்பாட்டைப் பற்றி அதிகமாகப் பேசுபவர்களாக போக்கிலி களுமே உள்ளனர். இலியோ தோல்கதாய்