பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • தேவையின்றி உன்னைப் பற்றி நீயே பேசாதே. முன்பு எப்படி இருந்தது. இப்போது எப்படி இருக்கிறது. இனி எப்படி இருக்கும்

என்று எப்போதும் பிதற்றிக் கொண்டிராதே.

காண்ஸ்டாண்டின் உசின்னல்கி

  • தன்னலத்தில் மகிழ்ச்சி பெறுவது என்பது இயல்பற்றது; தன்னலங் கொண்ட அனைத்துமே, ஒரு துளியளவேனும் பொறாமைப்பட ஏற்றதன்று. தன்னலத்துடன் இருப்பது மன நோயாளியாக இருப்பது போன்றதாகும்; மனநோய் என்பது

மகிழ்ச்சியற்றதும், சோர்வளிப்பதுவுமாகும்.

நிகலாய் செர்னிசேன்ஸ்கி

  • தனக்காக மட்டுமே உழைப்பவன், தனது வயிற்றை நிரப்பிக் கொள்ளும் ஒரு விலங்கைப் போன்றவண். மனித இனத்திற்காக உழைப்பவனே தகுதி படைத்தவண் ஆம். அபாய் குணாண்பயேவ்
  • தன் ஒருவனுக்காக மட்டுமே வாழ்வது என்பது, வெட்கம் நிறைந்த செயலாகும். நிகலாம் ஒஸ்ட்ரோவ்ஸ்கி
  • ஒரு மனிதனுள் சமூகத்தைப் பற்றிய இடம் சிறியதாகவும், தன்னைப் பற்றிய இடம் அதிகமாகவும் ஒருவண் எடுத்துக் கொள்ளும் போது, அவனது தனிப்பட்ட வாழ்வின் தோல்வி முழுமையான ஒர் அழிவாகவே இருக்கும். நிகலாய் ஒஸ்ட்ரோவ்ஸ்கி
  • தன் ஒருவனைப் பற்றியே, தண் ஒருவனின் நலன்களைப் பற்றியே சிந்திப்பவன், ஒர் பன்றியைப் போல் இருப்பவனி ஆவான்.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • உள்ளுயிர்ப்பின் புற்று நோய்க்கான முதன்மையான காரணம், தன்னலம் என்பதேயாகும். வாசிலி சுகோம்லின்னல்கி

228