பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் •8 த. கோவேந்தண்

  • பணம் உனக்குத் தேவைப்படாமல் இருக்கச் செய்வதற்கான எளிய வழி என்னவென்றால், உனது தேவைக்கு மேல் நீ ஈட்டாமல் இருப்பதுவும், உண்னால் ஈட்ட இயன்றதற்குக் குறைவாக நீ செலவழிப்பது என்பதுமேயாகும். வி.ஏ.குளுசேவ்ஸ்கி

போவித்தனம், அடிமைத்தனம், காலத்திற்கேற்ப மாறுதல்

  • போலித்தனம், அடிமைத்தனம், காலத்திற்கேற்ப மாறுதல் என்பவை ஒரு பெரிய கேடாகும். பல முகங்களில் இவை படிந்திருப்பதைக் கண்டு கொண்டு, அவற்றைப் பொறுத்துக் கொள்ளாதவனாவும், ஏற்றுக் கொள்ளாதவனாகவும் இருக்க கற்றறிந்து கொள்.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • ஒரு தனி மனிதரைப் பற்றி, செயலைப் பற்றி அல்லது நிகழ்வு பற்றி உன் மனத்தில் உள்ளதை வெளிப்படையாகப் பேசு. நீ என்ன சொல்ல வேண்டுமென வேறொருவர் எதிர்பார்க்கிறார் என்பதை ஊகித்தறிய எப்போதுமே முயலாதே. ஏனெனில், அது உண்னை போலியாகவும், பின்பு அண்டிப் பிழைப்பவனாகவும் அதுவும் முடிவில் ஒரு போக்கிலியாகவும் மாற்றிவிடும் எண்பதால்தான்.

வாசிலி ககோம்லின்ஸ்கி

  • உனது தோல்விகளையும், தவறுகளையும் மட்டுமே காண்பவர் களைத் தவிர்த்துவிட்டு, ஒன்று அவர்களை மண்னிக்கவோ ஏற்றுக்கொள்ளவோ செப். அத்தகைய மக்கள் ஒன்று பொய்யாகப் புகழந்துரைப்பவர்களாகவோ கோழைகளாகவோ பொதுவாக முட்டாள்களாகவோ இருப்பவர்கள் ஆவர். துண்பத்திலோ வருத்தத்திலோ அவர்களிடமிருந்து எந்த உதவியையும் எதிர்

பார்க்காதே. ஜி.எஸ்.ஸ்கோவோரோடா

233