பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தன்

  • வஞ்சகப் புகழ்ச்சியெண்பது கீழ்படிதல் என்ற போர்வையில் ஆட்சி செய்யப் பயன்படுத்தப்படுவதாகும். நிகலாய் செர்னிசேவ்ஸ்கி
  • இழிவான வஞ்சப்புகழ்ச்சியாளராகவோ, போலியான வேடதாரி யாகவோ இருப்பதைவிட வெளிப்படையான எதிரியாக இருப்பது சிறந்தது; முன்னவர்கள் மனித இனத்திற்கே களங்கத்தை விளைவிப்பவர். பீட்டர்
  • பொய்யாகப் புகழ்தலெண்பது எவ்வளவு தவறானது, கேடான தென எத்துணை முறை இவ் உலகிற்குச் சொல்லப்பட்டும், என்ன பயன்! இவ்வாறு புகழ்ந்துரைப்பவன் தன் நெஞ்சில் எப்போதுமே ஒரு நோக்கத்தைக் கொண்டிருப்பாண். இவான் கிரிலோம்
  • அண்டிப்பிழைப்பவர்கள் என்ற ஒரு தனிப்பட்ட உயிரினம் உரு வாகியுள்ளது; பொய்யுரைத்தல், கட்டுப்பாடுகளை மீறுதல்

ஆகிய நோக்கங்களை அது பெற்றுள்ளது.

எம்.இ.சால்டிகோவ் செசட்ரின்