பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

  • ஒரு பொது விதியாக, அரசியல் கட்சிகள், மிகுந்த பொறுப்பான பதவிகளுக்குத் தேர்ந்தெருக்கப்பட்ட, மிகுந்த அறிவுத் திறன், செல்வாக்கு, பட்டறிவு கொண்ட தலைவர்கள் என்றழைக்கப்படும் உறுப்பினர்களைக்கொண்ட சற்றேறக் குறைய நிலையான குழுக் களாக நடத்திச் செல்லப்படுகின்றன. வி.இ.இலெனின்
  • ஆய்வுக்குட்படுத்தப்பட்ட, ஆற்றல் நிறைந்த தலைவர்கள், (ஆற்றல் நிறைந்த மக்கள் நூற்றுக்கணக்கில் பிறப்பது இல்லை) தொழில் முறையாகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள், நீண்ட பட்டறிவு என்ற பள்ளியில் பயின்றவர்கள், முழுமையான உடன்பாட்டுடன் பணி யாற்றுபவர்கள், பத்து பேர் இல்லாமல் இக்கால சமுகத்தில் எந்த ஒரு பிரிவினரும் ஒரு முடிவு செய்யப்பட்ட போராட்டத்தை மேற் கொள்ள இயலாது. வி.இ.இலெனின்
  • பேரறிவு பெற்ற அரசியல்வாதி வருங்கால நிகழ்வுகளை முன் கட்டியே ஊகித்து உணர்பவராக இருப்பார்; அத்தகைய அறி வற்றவர்களோ நிகழ்வுகளால் நடத்திச் செல்லப்படுபவர்கள் ஆவர்.

வி.இ.இலெனின் * புரட்சிகரமான கோட்பாடு எதுவுமின்றி, எந்த ஒரு புரட்சிகரமான இயக்கமும் தோன்றி இருக்க இயலாது. வி.இ.இலெனின்

  • பொதுவுடமைப் பொறுப்பினரின் முதன்மையான கடமை, ஆணை கள் பிறப்பித்துக் கொண்டிருப்பதில் முழ்கிவிடாமல் பார்த்துக் கொள்வதேயாகும். அறிவியல் செயல் வெற்றிகளைக் காணத் தொடங்கக் கற்றுக் கொள்வதோடு, உண்மைகளைச் சரி பார்ப் பதை வலியுறுத்துபவனாகவும், தவறுகளை ஆய்ந்து அறிபவ னாகவும் இருக்க வேண்டும். வி.இ.இலெனின்
  • கருமையாக ஒருவர் இருக்க வேண்டுமெனில் அவர் அதற்கான உரிமையைப் பெற்றிருக்க வேண்டும்; அவ்வாறு கடினமாக இருப்பதற்கான உரிமை, அவர் தமது சொற்களிலும், செயலிலும்

மாறுபடாமல் இருப்பதற்காக அளிக்கப்படுவதாகும்.

வி.இ.இலெனின்

26