பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் εξε த. கோவேந்தன்

  • உடைமையாளர்களின் நாடாளுமன்ற நடைமுறையுடன் ஒப்பிரும்

போது, குடியாட்சி முன்னேற்றத்தில் சோவியத்துகள் ஒரு முன்னோ டியாக விளங்கியது உலகளாவிய வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தாகும். வி.இ.இலெனின்

  • சோவியத்துகள் ஒரு வகையில் உயர்ந்தவர்கள், ஏதோ ஒரு வகை


யில் புதுமையானவர்கள்; உலகப் புரட்சியென்னும் வரலாற்றின் முன் எப்போதும் நிகழாதவற்றை நிகழ்த்தியவர்கள்.

வி.இ.இலெனின்

புரட்சிகரமான மக்களிடமிருந்து நம்மை நாமே மறைத்துக் கொள்ள வில்லை; என்றாலும், ஒவ்வோர் அடி எடுத்து வைக்கும் போதும், ஒவ்வொரு முடிவினை நாம் மேற்கொள்ளும் போதும் அவர்களது தீர்ப்புக்காகக் காத்திருப்பது என்பது ஏற்புடையதன்று. உழைக்கும் மக்கள் கட்டம் தங்களது கட்டற்ற முயற்சிகளை மேற்கொள்வதை யே உறுதியாகவும், திடமாகவும் நாம் நம்பியிருக்கிறோம்.

வி.இ.இலெனின்

மக்கள் எதனைக்கருத்தினில் கொண்டுள்ளனர் என்பதைச் சரியாக உணர்ந்தறிந்து வெளியிடும்போது மட்டுமே நம்மால் ஆட்சிப் பொறுப்பு செய்ய இயலும், வி.இ.இலெனின்

கூட்டுடமை என்பது ஒர் அரசியல் அமைப்பாக சோவியத்தின் அதிகாரத்தைக் குறிக்கிறது. அது ஒருக்கப்பட்ட மக்கள் வெள்ளம் நாட்டின் அரசின் அனைத்து வேலைகளையும் நடத்திச் செல்ல வகை செய்கிறது; அதுவன்றி, பொதுவுடமை என்பது நினைத்துப் பார்க்கவும் இயலாதது. வி.இ.இலெனின்

சமன்மைக்கான பாதையை அதன் இறுதி விளக்க வரை மார்க்க அறிந்திருந்தாரென்றோ மார்ச்சியவாதிகள் அறிந்திருக்கிறார்கள் என்றோ நாங்கள் உரிமை கோரவில்லை. அது போன்ற எந்த ஒர் உரிமையினையும் கோருவதென்பதே அறிவற்ற செயலாகும். நாம் அறிந்திருப்பதெல்லாம் இந்தப் பாதை எந்தத் திசையில்

32