பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

செல்கிறது என்பதையும், உழைக்கும் மக்கள் படை அவ் வழியைப் பின்பற்றிச் செல்கிறது என்பதை மட்டும்தான், கோடிக்கணக்கான வர்கள் அவர்களின் உரிய கைகளில் பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளும்போது அவர்கள் பெறவுள்ள பட்டறிவின் முலம் மட்டுமே நடைமுறை விளக்கங்கள் வெளிச்சத்திற்கு வரக்கூடும்.

வி.இ.இலெனின்

  • அரசு எப்போதுமே நாட்டு மக்களின் கருத்து எண்பதன் மேற் பார்வையின் கீழேயே இருக்க வேண்டுமென நாம் விரும்பு கிறோம். வி.இ.இலெனின்
  • பொறுப்பான தலைவர்களைத் தாங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளும் உரிமை பொதுமக்கள் கட்டாயம் பெற்றிருக்க வேண்டும். அவர் களை மாற்றி அமைக்கும் உரிமையினையும், அவர்களின் நட வடிக்கையின் ஒவ்வொரு சிறு அடியினையும் அறிந்து, சரி பார்க்கும் உரிமையினையும் அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.

வி.இ.இலெனின்

  • உழைக்கும் மக்களால், அவர்களது புரட்சிகரமான ஆற்றலினா லும், முயற்சியினாலும், உருவாக்கப்பட்ட சோவியத்துகள் எண்பது ஒன்று மட்டுமே. மக்களின் நலன்களை முன்னேற்ற மடையச் செய்வதற்காக அவர்களின் முழு உழைப்பிற்கான உறுதிப்பாடாகும். வி.இ.இலெனின்
  • மக்கள் வெள்ளத்தினால் ஆதரிக்கப்பட்ட நோக்கங்கள் மட்டுமே வலி வுடையனவாயிருக்கும்; அத்தகைய அமைப்புகளே கால வெள்ளத்தில் நீடித்திருக்கும். நிகலாய் செர்னிசேவ்ளல்கி
  • இயன்றதைத் தேவையாகவும், கனவுகளை நடைமுறையாகவும் மாற்றவல்ல ஒரே,குறைவேபடாத ஆற்றலின் ஊற்றுக்கண் மக்களே.

r மாக்சிம் கோர்க்கி

  • ஒவ்வொரு மக்கள் கூட்டமும் வியத்தகு பணியாற்றும் வாய்ப்பு களுக்கான ஒர் ஊற்றுக் கண்ணாகும். மாக்சிம் கோர்க்கி

33