பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தன்

  • முன்னேற்றத்தின் குருதி ஒட்டத்தைப் பாதுகாக்கும் நிலம் மக்களே யாவர். விசாரியோன் பெலன்ஸ்கி
  • மக்களோ சமுதாயமோ தவறிழைக்காத சரியான, மிகச் சிறந்த

ஆய்வுரைஞர்கள் என்பதைப் பற்றி நான் உறுதியுடன் நிறைவு அடைந்துள்ளேண். விசாரியோன் பெலன்ஸ்கி

  • தனிப்பட்டவர்கள் தங்களைத்தாங்களே ஏமாற்றிக்கொள்ள இயலும், ஆனால் சமுதாயத்தினால் அவ்வாறு செய்ய இயலாது ஒரு வேளை சமுதாயம் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டாலும் கூட, இது நீண்ட காலத்திற்கு நீடிக்க இயலாது. அதனுடைய ஆளுமை எவ்வளவு தீவிரமானதாக இருக்கிறதோ, அதனுடைய பழிவாங்கும் தன்மையும் அவ்வளவு இரக்க மற்றதாக இருப்ப துடன், அதனுடைய சுருக்கமான பாராட்டுதலும் ஒளிமிக்கதா யிருக்கும், அதனுடைய ஏளனம் இகழ்ச்சிநிறைந்ததாக இருக்கும். விசாரியோன் பெலன்ஸ்கி
  • மக்கள் எப்போதுமே உண்மையை வெளிப்படுத்துபவர்களாக இருப்பர். மக்களின் வாழ்க்கை எப்போதுமே பொய்யானதாக இருக்க இயலாது. அலெக்சாண்டர் எர்சன்
  • மக்கள் எவ்வாறு ஒரு கருத்தை ஏற்றுக்கொள்கிறார்கள் என்பதே அதனுடைய செயல்படுதிறனை அளவிரும் ஒரே கருவியாகும். எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்
  • ஒரு நாடு, ஒரு முறை வரலாற்று மேடையில் தோன்றிவிட்டதென் றால்,தடைசெய்ய இயலாத வண்ணம் அது முன்னேற்றமடையும். கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

மக்களுக்கான வேண்டுகோள்

  • மக்கள் அரசியல் விழிப்புணர்ச்சி பெற்றவர்களாக உள்ளபோது ஒரு நாடு வலிமையுடையதாகும் என்பது நமது கருத்து. மக்கள்

34