பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • போராட்டத்தைத் தொடர்ந்து மேற்கொண்டு நடத்திச் செல்ல நீ கற்றுக் கொள்ள வேண்டும், இல்லாவிட்டால் உனது பொருளா

தார திட்டங்களினால் எவ்விதப் பயனும் விளையாது.

வி.இ.இலெனின்

  • ஒவ்வொரு போராட்டவாதியும் ஒரு தலைவராக, பொருளாதார முன்னேற்றப் பணிகளில் உழவர்கள், உழைப்பாளிகளின் தலைவ ராக இருக்க வேண்டும். வி.இ.இலெனின்
  • ஒவ்வொரு போராளியும் கொள்கைப் பரப்பினரும் நமக்குத் தேவை. சரியாகக் கட்சி உணர்வின் அடிப்படையில் அவரது கடமையை ஆற்றுவாரேயானால், அவரது பணியைச்செம்மையாகச்செய்தவர் ஆவார். வி.இ.இலெனின்
  • ஒரு தெளிவான, நன்கு சிந்தித்து முடிவு செய்யப்பட்ட கொள்கை முடிவு இன்றி மேற்கொள்ளப்பரும் எந்த ஒரு போராட்டமும் வெறும் முழக்கத்தைப் பயன்படுத்தும் நிலைக்கே கீழே தள்ளப்படுகிறது. வி.இ.இலெனின்
  • வகுப்புப் பிரிவினைக்கு அப்பாற்பட்ட சிற்றுடைமை அறிவாளிகள் குணநலனெண்பது, உயர்ந்து ஒலிக்கும் சொற்றொடர்களை அள்ளி வீசுவதேயாகும். இந்தக் கசப்பான உண்மை எளின்மயாக வும், தெளிவாகவும், ஒரு நேரடியான முறையிலும் மக்களுக்குச் சொல்லப்பட வேண்டும். வி.இ.இலெனின்
  • பேச்சு வல்லமை பெற்றவர் என்பவர்களே உழைக்கும் மக்களின் இழிவான எதிரிகள் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்ல நான் சோர்வடையவே மாட்டேன். வி.இ.இலெனின்
  • இந்தப் பொதுமக்களின் ஒவ்வொரு சிந்தனை, பேச்சு முதலியவற் றின் மனநிலையில்உள்ள வேறுபட்டதன்மைகளை அறிந்துகொள்ள இயலும் அளவுக்குக் குறிப்பிட்ட பொறுமையுடனும், எச்சரிக்கை யுடனும் பொதுமக்களை அணுக நாம் கற்றுக் கொள்ளவேண்டும். வி.இ.இலெனின்

36