பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • பொதுமக்களுக்கு இன்னமும் அறிமுகமில்லாத, அவர்களால் எளிதில் புரிந்து கொள்ள இயலாத கனத்த சொற்படை பயன்பாட் டையும், அயன்மொழிச் சொற்களையும், கைவயமுள்ள முழக்கங் களையும், விளக்கங்களையும், முடிவுகளையும் முழுவதுமாக தவிர்த்துவிட்டு, மக்கள் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு மொழியில்

எளிமையாகவும், தெளிவாகவும் பேசுக. வி.இ.இலெனின்

  • கொள்கைப் பரப்பிலும், போராட்டத்திலும் தெளிவு பெற்றிருப்பது என்பது ஒர் அடிப்படைத் தேவையாகும். வி.இ.இலெனின்
  • முன்னேற்றம் பற்றிவிளக்கம் மேற்கொள்பவர்கள் உருசியப் பேச்சு, சிந்தனையின் இன்றியமையாத கருப் பொருள்களைக் கண்டு கொண்டு அவற்றை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

வி.இ.இலெனின்

  • கொள்கைப் பரப்பு முழக்கங்களைக் கூவுவதன் மூலம் சிக்கல்

களைச் சந்திப்பதை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது.

வி.இ.இலெனின்

  • ஒவ்வொரு கருத்துப் பரப்புபவரின், ஒவ்வொரு போராளியின் கலை நுணுக்கம் என்பது கேட்பவர்களைப் பிணைக்கும் ஆற்றல் பெற்றதாகவும், தெரிந்த ஒர் உண்மையினை எந்த அளவுக்கு நிறைவாகச் சொல்ல இயலுமோ, எந்த அளவுக்கு எளிமையாகப் புரிந்து கொள்ள வைக்க இயலுமோ, படம் பிடித்தது போன்ற. நினைவில் வைத்திருக்கும் அளவுக்கு செல்வாக்கு ஏற்படுத்து வதாகவும் இருக்க வேண்டும். வி.இ.இலெனின்
  • கருத்துரை முழக்கங்களை முழக்குவதன் மூலம் சிக்கல்களை நாம் சந்திக்காமல் தட்டிக் கழிக்கக் கூடாது. வி.இ.இலெனின்
  • சொற்களே மக்களை ஒன்றாகக்கொண்டு வந்து சேர்ப்பவை. எனவே ஒவ்வொருவராலும் நாம் புரிந்து கொள்ளப்படச் செய்ய முயல் வதுடன், உண்மையைத் தவிர வேறெதனையும் பேசாமலும் இருக்க வேண்டும். இலியோ தோல்கதாய்

37