பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவு, வளர்ப்பு, கல்வி

அதிக அறிவின் பயனின்மை

  • மனித அறிவு எல்லையற்றது. ஆனால் மனிதன் அறிந்து கொள்ள வேண்டியது தேவையற்றதாகும். மனித அறிவெனும் பேராழியில், மிகவும் இன்றியமையாதவை, மனிதரை வலிவுள்ள வர்களாக்கும், இயற்கையின் மீதும், நிகழ்வுகள் மீதும் அவர் களுக்கு ஆற்றலளிக்கும், இயற்கை ஆற்றல்களையும், வளத்தை யும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும், மனித சமுகத்தின் வாழ்க்கையினை எவ்வாறு மாற்றுவது என்பதையும் கற்பிக்கும் அறிவை மட்டுமே அவன் பொறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும். என்.கே.குருப்ஸ்கயா
  • அதிக அறிவு பெற்றிருப்பது என்பது ஒரு திறமை என நினைப் பது தவறான ஒன்றாகும். அதனுடைய படிநிலையன்றி, அதன் அளவு இன்றியமையாததில்லை. இலியோ தோல்கதாய்
  • பேரறிவு என்பது அதிகமானவற்றை அறிந்திருப்பதில் இருப்ப தில்லை. நாம் அனைத்தையும் அறிந்திருப்பதென்பது கற்பனை செய்தும் காண இயலாது. பேரறிவு என்பது, இயன்ற அளவு அதிகமானவற்றை அறிந்திருப்பதில் இல்லை. ஆனால் எந்த அறிவு பயன் நிறைந்தது. எது பயன் குறைந்தது, எது இன்னமும் பயன் குறைந்தது என்பதை அறிந்து கொள்வது என்பதிலேயே உள்ளது. இலியோ தோல்கதாய்
  • அறிவு பெறாமல் இருப்பது என்பதற்காக அஞ்சாதே. ஆனால் தவறான அறிவைப் பெற்றிருப்பதற்கு அச்சம் கொள். ஏனெனில்

உலகின் அனைத்துக் கேடுகளுக்கும் அதுவே காரணமாகும்.

இலியோ தோல்கதாய்

39