பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • ஒருவன் எவ்வளவு அதிகமான அறிவு பெற்றுள்ளானோ, அவ் வளவு அதிகமாக அவன் வலிமை பெற்றவனாக இருப்பான்.

மாக்சிம் கோர்கி

  • ஆண்களின் உழைப்பால் உருவாக்கப்பட்டு, அறிவியலால் கவர்ந்து கொள்ளப்பட்ட அறிவானது திரண்டு கொண்டும், ஆழ மாகவும், அகலமாகவும், கூர்மையாகவும் வளர்ந்து கொணர் டுள்ளது; நமது எண்ணற்ற கலைகளின், படைப்பு ஆற்றல்களின் முடிவற்ற முன்னேற்றத்திற்கு இதுதான் அடித்தளமாக உள்ளது. மாக்சிம் கோர்கி
  • கற்றறிதலுக்கான தேவையைப் பற்றி நிலைநாட்டுதல் என்பது கண்பார்வையின் பயனைப் பற்றி விளக்குவது போலாகும்.

மாக்சிம் கோர்கி

  • அறிவு என்பது நமது உலகின் முழுமையான மதிப்பு வாய்ந்த தாகும். நாம் கற்றறிய வேண்டும். அறிவுத் தாகம் கொண்டவர் களாக நாம் இருக்க வேண்டும். சில பொருள்கள் இன்னமும் அறிந்து கொள்ளப்படாமல் உள்ளபோதும், அறிந்து கொள்ள இயலாதது என்று எதுவுமே இருப்பதில்லை. மாக்சிம் கோர்கி
  • முன்னேற்றமற்று இருப்பதற்கும், இயக்கம் அற்று இருப்பதற்கும்

தலையாய காரணமாக இருப்பது அறியாமையே ஆகும்.

மாக்சிம் கோர்கி

  • அடிக்கடி சொல்லப்படுவது போல், நம்பிக்கை இன்றி எந்த மனிதனும் வாழ இயலாது என்பது உண்மையானால், பின்னர் அறிவினைப் போன்ற அனைத்து வல்லமை படைத்த நம்பிக்கை

யினைத் தவிர வேறு எந்த நம்பிக்கையும் இருக்க முடியாது.

இலியா மெச்சின்கோவ்

  • அறிவே, அறிவைத் தவிர வேறு எந்த ஒன்றினாலும், மனிதனை விடுதலை பெற்றவனாகவும், மிக உயர்ந்தவனாகவும் ஆக்க இயலாது. திமிட்ரி பிஸ்ரேவ்