பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • அறிவெண்னும் ஊற்று எப்போதுமே வற்றிப்போவதில்லை.மனிதன் எத்தகைய் வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், தேடிப் பெறவும், கண்டு கொள்ளவும் கற்றறியவும் இன்னமும் சில பொருள்கள் எஞ்சி இருக்கத்தான் செய்கின்றன. இவான் கோன்சரோவ்
  • அறியாமையைப் பற்றி எப்போதும் தற்பெருமையாகப் பேசாதே;

அறியாமை என்பது ஆண்மையற்றதாகும்.

நிகலாய் செர்னிசேவ்ஸ்கி

  • ஒருவனது வாழ்க்கையினை முன்னேறச் செய்ய வேண்டியதன் தேவையானது, மனத்தில் முயற்சியின் தேவையினைத் தவிர்க்க இயலாதபடி உருவாக்குகிறது. நிகலாய் செர்னிசேவ்ஸ்கி
  • மனிதன் எங்கே சென்றாலும் அவனது துணைவனாக இருப்பது அறிவே ஆகும். தேவிட் குராமிச்விலி

திமுக்கமும் அறிவு வளர்ச்சியும்

  • மனிதனின் தனித்தன்மையைவிட மதிப்பு மிகுந்ததும், குழப்பம் நிறைந்ததும் வேறெதுவுமில்லை. அதனுடைய அனைத்துப் பக்க முன்னேற்றமும், ஒழுக்கத் துய்மையும் பொதுவுடைமைக் கல்வியின் முடிவான நோக்கமாகும். வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • நாம் வளர்க்கும் ஒரு மனிதன், துய ஒழுக்கம், உள்ளுயிர்ச்செல்வம், நல்ல உடல்நிலை ஆகியவற்றின் கலவையாக இருக்க வேண்டும். வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • இன்றைய இளைஞனைப் பயிற்றுவிப்பது, கல்வியளிப்பது, கற்றுத் தருவது ஆகியவற்றின் முழு நோக்கமும் பொதுவுடைமை மெய்மைகளை அவர்களில் விதைப்பதாகவே இருக்க வேண்டும். வி.இ. இலெனின்

45