பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தனர்

  • ஒரு கல்விக்கான ஏக்கம் ஒவ்வொரு மனிதனுள்ளும் அமர்ந்து உள்ளது; அவர்கள் முச்சுவிரும் காற்றுக்காக ஏங்குவது போல

மக்கள் ஒரு கல்விக்காக ஏங்கி அதனைப் பெறுகிறார்கள்.

இலியோ தோல்கதாய்

  • அனைத்து மக்களுடைய நல்வாழ்வு அல்லது இழப்புக்கேடு

என்பது கல்வி என்பதன் வழியாகவே வந்தடைவதாகும்.

என்.ஐ.நோவிகோவ்

  • ஒரு மாநிலத்தின் வளமையும், நாட்டின் நலனும் தவிர்க்க இயலாத வண்ணம் நல்லொழுக்கங்களையே சார்ந்துள்ளன; நல்லொழுக்கங் களும் நல் வளர்ப்பையே சார்ந்துள்ளன. என்.ஐ.நோவிகோவ்
  • தொடர்ந்து அதிகரித்து வரும் தலைமுறைகளை முழுமையான நன்மை எனப்படும் மனித இனத்தின் பொதுவான, முடிவற்ற தொடர் தலுக்குக்கொணர்வது எண்பதுவே அனைத்து வகையான கல்வி யின் இன்றியமையாத நோக்கங்களின் ஒன்றாகும்.

கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி * மனத்தை முன்னேற்றமடையச் செய்வதுடன்கூட, ஒரு குறிப்பிட்ட அளவு தகவல்களை அளிப்பதுடனும், தீவிரமான பணிக்கான ஒரு தாகத்தைத் துண்டுவதாகவும் கல்வி இருக்க வேண்டும்; இது வன்றி வாழ்க்கை என்பது பயன் நிறைந்ததாகவோ, நிறைவு அளிப் பதாகவோ இருக்காது. காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது பணிசெய்யும் பழக்கத்தை அவர்களிடையே உருவாக்கும். அதன்பால் ஒரு விருப்பத்தை உண்டாக்கித் தனது தொழிலைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு உதவி செய்வதாக இருக்க வேண்டும்.

காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி * மனிதனின் படைப்பு நோக்கங்களை நிறைவேற்றுவதாகவே கல்வி இருக்கவேண்டும். அறிவினைத் திரட்டுவது மட்டுமே போது மானதன்று; அது எவ்வளவு இயலுமோ அவ்வளவு அகன்ற

46