பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • அழகு நிறைந்த, படைப்பாற்றல் மிக்க அடிப்படைகளைப் பெறாமல் எந்த மனிதனும் குழந்தைப் பருவத்தைக் கடக்கக் கூடாது; இவை யின்றி எந்த ஒரு தலைமுறையும் தனது பயணத்தை மேற் கொள்ளவும் கூடாது. பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி
  • உண்மையான மக்களின் வாழ்க்கையைப் பற்றிய உள்ளுறை யைப் புரிந்து கொள்ள, அழகுணர்ச்சி மிக்க ஒருவனால் மட்டுமே இயலும். பெலிக்ஸ் செர்ஸின்ஸ்கி
  • பண்பாட்டின் வரலாற்றை அறிந்திராத எந்த ஒரு மனிதனும் நாகரிகமானவனாக ஆக இயலாது. மாக்சிம் கோர்கி
  • பண்பாட்டில் ஒரு நெடிய உயர்வு ஏற்படாமல், சமண்மைச் சமுதாயம் என்பது ஏற்பட இயலாது. அது அனைத்து வெற்றிகளையும்ஒருங்

கிணைந்து உறுதிப்படுத்தும் பைஞ்சுதையாக விளங்குகிறது.

என்.கே.குருப்ஸ்கயா

  • மிக உயர்ந்த கொடைகளில் கல்வியும் ஒன்று என்பது மெய்ப்பிக்கப் படவேண்டுமா? கல்வியற்ற மக்கள் முரடர்களாகவும், வறியவர்

களாகவும், துன்பம் சூழ்ந்தவர்களாகவும் உள்ளனர்.

நிகலோய் செர்னிசேவ்ஸ்கி

  • முழு அளவில் கல்வி கற்பிக்கப்படுவதற்கு, ஒரு தனி மனிதன் முன்றினைப் பெற்றிருக்க வேண்டும் . பரந்த அறிவு, சிந்திக்கும் பழக்கம், உணர்வுகளைப் பற்றிய பெருந்தன்மையான எண்ணம். சிறிதளவே அறிவு பெற்றுள்ளவர் ஒர் அறிவிலியாவர்; பழக்கப் பருத்திக் கொள்ளாதவரின் மனம் தூய்மையற்றது அல்லது நகைச் சுவை உணர்வற்றது. பெருந்தன்மையான உணர்வு

களைப் பெற்றிராதவர் கொடு மனம் படைத்தவர்.

நிகலோய் செர்னிசேவ்ஸ்கி

49