பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

தன் முன்னேற்றம்

  • கல்வியெண்பது பள்ளியினால் மட்டுமே தனியாகச் செய்யப்படும் ஒரு கடமையன்று. பள்ளி, அறிவிற்கான திறவுகோலை மட்டுமே உனக்களிக்கிறது. உனது வாழ்க்கை முழுவதும் பள்ளிக் கல்விக்கு வெளியிலேயே இருக்க வேண்டும். ஒருவண் தன் வாழ் நாள் முழுவதும் தனக்குத் தானே கற்பித்துக் கொள்ள வேண்டும். ஏ.வி.லுனாசர்ஸ்கி
  • மனிதன் உயிர் வாழ்ந்திருக்கும் வரை, அவன் தலை நரைத்து விட்ட போதும் கூட, அறிவைத் திரட்ட இயலும், திரட்ட வேண்டும், திரட்ட விரும்ய வேண்டும். எனவே, வாழ்க்கை என்பது பள்ளியெனும் சட்டத்தில் குறுக்கிப் பொருத்தப்பட இயலாதென்பதால், பள்ளிக்கு வெளியே பெறப்பரும் அனைத்துக் கற்றறிதலும், பள்ளிக்கல்விக்கு

வெளியே மேற்கொள்ளப்படும் ஒரு நடைமுறையேயாகும்.

ஏ.வி.லுனாசர்ஸ்கி

  • எந்த ஒரு மனிதனும் உலகில், ஏற்பு நிலையில், அதாவது முழு வளர்ச்சி பெற்றவனாகப் பிறப்பதில்லை. அவனது வாழ்க்கை எவ்விதமானதாயிருந்தாலும், அது இடையறாத முன்னேற்ற மாகவும், முடிவடையாத வடிவமைப்பாகவும் இருக்கக்கூடும்.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • நீ பள்ளியில் கற்றறிந்து கொள்ள வேண்டுமானாலும், பள்ளியை விட்டு நீங்கியபின் இன்னமும் அதிகமாக நீ கற்றறிதல் கொள்ள வேண்டும்; இந்த இரண்டாவது கற்றறிதல், உனது தனித் தன்மை மீதும், சமுகத்தின் மீதும் கொண்டிருக்கும் செல்வாக்கும், ஏற்படுத்தும் விளைவுகளும், அளவிட இயலாதபடி மிகவும் இன்றி யாதவையாம். திமிட்ரி பிசரேவ்
  • ஏற்பு நிலையில் உள்ள கோட்பாடுகள் நல்ல நண்பர்களிட மிருந்தோ, ஒரு புத்தகக் கடையிலிருந்தோ வாங்கப்பட இயலாது.

நம்முடைய கலைகளில் தனிப்பட்ட மனச் சிந்தனை நடைமுறை யின் விளைவாக ஏற்படுபவையாகும் அவை. திமிட்ரி பிசரேவ்

50