பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • பள்ளிக் கல்வி பயில்வதென்பது, கல்வி என்னும் நல் மலரின்

இதழ்களில் ஒன்றாக இருக்கும் என்பதைத் தவிர வேறில்லை.

வாசிலி சுகோம்லின்ஸ்கி

  • உனக்குத் தேவையான அறிவைப் பெற நீயே தோண்டிக் கண்டு பிடி, உனது தோழர்களின் கரும் உழைப்பை நீ ஏமாற்றிப் பெறுவ தென்பது நேர்மையற்றது. கொறிப்பது என்பது ஒர் ஒட்டுண்ணி யாக ஆவதற்கான முதல்படியாகும். வாசிலி ககோம்லின்ஸ்கி
  • எங்கு மன முயற்சி எதிர்பார்க்கப்படுகிறதோ அங்கு அதுவன்றி பாடங்கள் கற்பதில் காலம் வீணாக்கப்படுவதே, ஒய்வான, விடுதலையான நேரமில்லாமல் இருப்பதற்கான இன்றியமை யாத காரணம். வாசிலி சுகோம்லின்ஸ்கி
  • கடந்த நூற்றாண்டுகளின் மதிப்பு நிறைந்த செயலாக்கங்களைப் பற்றி ஒர் ஆசிரியர் வளரும் தலைமுறைக்குத் தெரிவிக்க வேண்டும், ஆனால் தவறுகளையும், தப்பெண்ணங்களையும், கெட்டவை

களையும் தெரிவிக்காமல் நிறுத்திக் கொள்ளவேண்டும்.

ஏ.வி. லுனாசால்ஸ்கி * தன் மாணவனை என்னவாக ஆக்க வேண்டுமென ஆசிரியர் விரும்புகிறாரோ, அதனைப் போலவே அவர் இருக்க வேண்டும். வி.ஐதல்

  • தனது மாணவனைப் பயிற்றுவிக்க வேண்டி, ஆசிரியர் வாழ்

வினை முழுவதுமாக அறிந்திருக்க வேண்டும்.

இலியோ தோல்கதாய்

  • கல்வியில் உள்ளவை அனைத்துமே, கற்பிப்பவர் யார் என்பதி லேயே தொக்கி நிற்கிறது. திமிட்ரி பிசரேவ்
  • ஒர் ஆசிரியராக நீ இருப்பதற்கு இன்றியமையாதபடிமுதலில்உனது மாணவனை உள்ளும் புறமும் நீ அறிந்திருக்கவேண்டும். இரண்டா வதாக உனக்கும் உனது மாணவனுக்குமிடையே முழுமையான நம்பிக்கையினை ஏற்படுத்த வேண்டும். திமிட்ரி பிசரேவ்

59