பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

% குணநலன்கள் நிறைந்த தனிப்பட்ட ஒருவராலன்றி, வேறு எவராலும் இன்னொரு குணநலன் நிறைந்தவரைப் பயனுள்ள வகையில் வடிவமைக்க இயலாது. அதே போன்று ஒரு நல் லொழுக்கம்நிறைந்தவராலேயே மற்றொரு நல்லொழுக்கம் நிறைந்த வரை வடிவமைக்க இயலும், காண்ஸ்டாண்டின் உசின்ஸ்கி

  • கற்பிப்பவராலேயே கூட முழுமையாக அறிந்து கொள்ள இயலா தபடி கல்வியின் ஆற்றல் மிகப் பெரியது என்பதை எப்போதும் அவர் நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

காண்ஸ்டாண்டின் உசிண்ஸ்கி

  • கற்பிப்பவர் என்பவர் அதிகாரப்பிரிவினர் அல்லர்; அவர் அதிகாரப் பிரிவினராக இருந்தால், அவர் கற்பிப்பவராக இருக்க மாட்டார். கான்ஸ்டான்டின் உசின்ஸ்கி
  • நமது அறிவில்வந்தடையவேண்டிய ஒவ்வொன்றும் நமது உள்ளு யிரின் ஒரே கதவான கவனத்தின் மூலமே தவிர்க்க இயலாதபடி பயணம் செய்ய வேண்டும். கான்ஸ்டாண்டின் உசின்ஸ்கி
  • ஒரு துவைக்கும் கல்லையே கண்டறியாத, ஒரு துணியை, விரை

வாக வெளுப்பதைவிட, ஒரு மனிதரை ஒரே இரவில் உன்னால் மாற்ற இயலாது. எம்.இ. சால்டிகோவ் செசட்ரின்

  • ஒரு குறிப்பிட்ட வயது வரை அளிக்கப்பட இயலாதவை, அரசியல்

உரிமைகள் போல, பலவகைப்பட்டவை உள்ளன.

அலெக்சாண்டர் எர்சன்

  • கடினமான பாடம் என்பது எதுவுமே இல்லை, ஆனால் புரிந்து கொள்ள இயலாத, செரிக்க இயலாத கற்பித்தல் என்பது மட்டும் இருக்கவே செய்கிறது. அலெக்சாண்டர் எர்சன்
  • கோட்பாடுகள் எண்பவை கருத்துகளால் உருவாக்கப்படுகின்றன; அதே போன்று நன்னடத்தை என்பது முன்மாதிரியால் உருவாக் கப்படுகிறது. அலெக்சாண்டர் எர்சன்

61