பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

  • கற்பித்தல் என்பது எடுத்துக்காட்டுகளினால் விளக்கப்படாமல், முழுச் சுற்றுச் சூழ்நிலைகளால் மாணவனின் கண்களில் முறைப் பருத்தப்படாமல் உள்ளபோது, அது எவ்வளவு மிகுந்த நல்நோக்கம் கொண்டதாயிருந்தாலும், அதனைவிடப் பயனற்றதும், ஏன் கெடுதல் நிறைந்ததும் வேறெதும் இல்லை.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • நல்ல கல்வி ஒரு மனிதனை மேலும் நல்லவனாக்க இயலாது என்னும் அளவு கெட்ட மனிதனாக எவருமே இருப்பதில்லை.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • சில கைத்தொழில், அறிவியல் அல்லது கலை போன்றவற்றின் நுணுக்கங்களை அறிந்து சிறந்தவனாக விளங்காத வனால் எப்போதும் தகுதி படைத்த எந்த ஒன்றினையும் உருவாக்க இயலாது. இவான் மிச்சுளின்
  • தாங்களாகவே எதனையும் செய்து கொள்ள இயலாமல், அவர் களாகவே செல்லக் கூடிய இடங்களுக்கும் தங்கள் காதுகளைப் பிடித்து இழுத்துச் செல்ல வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்கள் மட்டுமே தங்கள் அறியாமைக்காக அவர்களது ஆசிரியர்களின்

திறமையின்மைபற்றிக் குறை கூறுவார்கள்.

நிகலாய் தோப்ரோலியுபோவ்