பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தன்

கற்றறிந்தவராகவும் அறிவு நிறைந்தவராகவும் இருக்க வேண்டும். அலெக்சாண்டர் இவனோவ்

  • ஒவியம் வரைவதும் வண்ணம் தீட்டுவதும், இலக்கியத்திற்கு உதவவும், அதன் விளைவாக மக்களை விழிப்படையச் செய்ய

வும் உதவும் ஒரு கருவியேயன்றி, வேறொன்றுமில்லை.

ஏ.ஜி.வெனட்சியனோவ்

  • தோற்றங்கள் என்பவை திறமையின் ஒரு நீண்ட அறிவுரையாக வும் கட்ந்து போன நாள்களின் சாட்சியாகவும் முன்னர் வாழ்ந்திருந்த வர்களின் நினைவின் வாழ்க்கையாகவும், வலிமையைப் பற்றிய ஒரு வெளிப்பாடாகவும், இறந்தவர்களை உயிர்ப்பிப்பதாகவும், பாராட்டு, புகழின் அழியாத் தன்மை கொண்டதாகவும், கடந்தகால துணிவான செயல்களை நினைவூட்டு வது போன்ற வாழ்க்கை நினைவுகளைக் கொண்டதாகும். தோற்றங்கள் என்பவை நெருந் தொலைவில் உள்ளவற்றைத் தெரியும்படி செய்வதும், பல்வேறு பட்ட இடங்களில் உள்ளவற்றை ஒன்றாக எடுத்துக் காட்டுவது மாகும். எஸ்.எப்.உசகோவ்
  • வண்ணத்தைத் தெளிப்பதும், கிறுக்குவதும், உண்னால் எவ்வளவு

சிறப்பாகச் செய்ய முடிந்தாலும், கலையாகாது.

பி.பி.சிஸ்டியாகோவ்

  • கலைஞன் என்பவன் அவனது காலத்தில் மிக உயர்ந்த கற்ற றிந்த மக்களில் ஒருவனாக இருக்க வேண்டுமென்பது சரியான தாகவே எனக்குத் தோண்றுகிறது. இன்று எட்டப்பட்டுள்ள முன்னேற்றம் பற்றிய செய்திகளை அவன் அறிந்து கொள்ள வேண்டும், சமூகத்தின் மிகச் சிறந்த உறுப்பினர்களைக் கிளர்ச்சி யடையச் செய்யும் அனைத்துச் செய்திகளைப் பற்றியும் இந்த நேரத்தில் நிலவுவனவற்றைவிடத் தொலைதுாரமும் ஆழமாகவும் செல்லக்கூடிய தனிப்பட்ட தனது கருத்துகளைக் கொண்டிருக்க வேண்டும். இவான் கிரம்சோகி