பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் * த. கோவேந்தனர்

  • கலைஞன் என்பவன் வரலாற்றாசிரியனாகவும், கவிஞனாகவும், மெய்யியலறிஞனாகவும், உற்று நோக்குபவனாகவும், இவை

அனைத்தும் ஒரு சேரப் பெற்றவனாகவும் இருக்க வேண்டும்.

ஏ.ஏ. பெஸ்டுகேவ் மார்லின்ஸ்கி

சிட்டிடக் கலை

  • ஒவ்வோர் இன்றியமையாத பெரிய காலமும், அதனுடைய பெரிய கட்டிடக் கலையைப் பெற்றிருக்கிறது. ஏ.வி. லுனாசர்ஸ்கி
  • கட்டிடக் கலையெண்பது இவ் உலகின் இன்னுமோர் ஆண்டுக் கணிப்பாகும், பாடல்களும், தொல்மரபுகளும் முன்னரே அமைதியில் வீழ்ந்துவிட்டபோது, அது மட்டும் இன்னமும் பேசிக் கொண்டே இருக்கிறது. நிகலாய் கோகோல்

கவிதை

  • இன்றைய கவிதை எண்பது போராட்டத்தின் ஒரு கூறாகும். அதன் ஒவ்வொரு சொல்லும், ஒரு படையின் போர்வீரனைப் போல் இருக்க வேண்டும். விளாடிமிர் மாயாகோவ்ஸ்கி
  • கவிதைக்கு ஒரு வடிவத்தையே நாண் ஏற்றுக்கொள்கிறேன். கருத்துச் சுருக்கம் என்பதுவே அது. அது கணித சமன்பாட்டினைப் போல் நுட்பத்தைப் பெற்றுள்ளதாகும்.

விளாடிமிர் மாயாகோவ்ஸ்கி

  • வீரம்செறிந்த கவிதைகளைக் காலங்கள் யாவும் அழைக்கின்றன. மாக்சிம் கோர்கி
  • மற்ற எது ஒன்றினையும் போலவே, கவிதையும் ஒரு வணிகமாக ஆகிவிரும் அந்தக் கணத்திலேயே, அதன் புனிதமான அழகினை

யும், இயல்புத் தன்மையையும் அது இழந்துவிடுகிறது.

மாக்சிம் கோர்கி

70