பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

  • ஒரு கவிஞனாக நீ இருக்க, கவிதைத் தோற்றங்களில் நீ சிந்திக்க வேண்டுமேயன்றி, இனிமையான இன்னிசை ஒலிகளில் சிந்திக்கக் கூடாது.நீஒரு கவிஞனாக இருக்கச்சமகாலப்சிக்கல்களில் ஈடுபாடு கொண்ட ஒர் ஆற்றல் நிறைந்த உணர்வு உனக்குத் தேவையே யன்றி, புகழுடன் ஒளிர்வதற்கான ஒர் வியப்பான ஏக்கமும், ஒரு செயல்பாடற்ற, ஏறுமாறான க்ற்பனையில் ஆழ்ந்திருப்பதும் பாதிக் கப்பட்ட உணர்வுகளும், நன்கு அழகு செய்யப்பட்ட துன்பமும் உனக்குத் தேவையில்லை. விசாரியோன் பெலின்ஸ்கி
  • அனைத்துக் கவிதைகளும், வாழ்க்கை பற்றிய ஒரு வெளிப்பாடா கவே இருக்க வேண்டும். ஆனால் வாழ்க்கையைப் பற்றி விளக்க, கவிதை எண்பது அனைத்துக்கும் முதலாவதாக, கவிதையாக இருக்க வேண்டும். விசாரியோன் பெலின்ஸ்கி
  • பாடல் எழுத இயன்றவனாய் இருப்பது எண்பது ஒரு கவிஞனாக இருப்பதெனும் பொருளளிக்காது, இதற்கான சான்று புத்தகக்

கடைகளில் மலைபோல் கவிதைகள் குவிந்து கிடப்பதேயாகும்.

விசாரியோண் பெலின்ஸ்கி

  • கட்டுக்கடங்கா உணர்ச்சிகளும், முரண்பாடுகளும் இல்லையெனில்,

அங்கு வாழ்வோ கவிதையோ இருக்க இயலாது.

விசாரியோன் பெலின்ஸ்கி

  • கவிதை என்பது அனைத்துத் திறமைகளின் உள்ளுறையும் ஒளிப் பிழம்பாகும். பியோடர் தோஸ்தோயெவ்ஸ்கி
  • கவிதை எண்பது அழகினை நற்பண்பாகமாற்றும்செயலின் உள்ளுயிர் ஆகும். எம்.எம்.பிரிஉடிவின்
  • கவிதை எண்பது மனிதனின் உள்ளுயிரை ஒளிவிடச் செய்யும்.

ஒரு பிழம்பாகும். அது எரிந்து, வெம்மையை அளித்து, ஒளியூட்டு கிறது. ஒர் உண்மையான கவிஞன், தவிர்க்க இயலாத வண்ணம், எரிக்கும் வலியினால் தன்னையும் மற்றவர்களையும் உணர்ச்சி

71