பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

அறியாமல் அவர்கள் ஏதோ தீய ஆற்றல் தங்களைக் கெடுப்பதாக எண்ணுகின்றனர். அவர்களைக் கெடுக்கும் தீய ஆற்றல் அவர்களே.

6 அன்பைப் பெறுவதற்கு ஏற்றவர்களாக மக்கள் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும். இல்லை என்றால் யாரும் அவர்கள் மேல் அன்பு செலுத்தார். உறவு நிலையில் முதன்மையானது, உறவுக்கு உகந்தவராக ஒவ்வொருவரும் தம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான்.”

அதாவது அனைத்துயிரிலும் தரம் இருப்பதை உணர்ந்தவரே உண்மையை உணர்ந்தவராவார். தீயை நன்றாக மூட்டிவிட்டால் புகை போய்விடுவதைப் போல அன்புப் பெருக்கை நானிலத்தின் நான்கு புறத்தும் பாயவிட்டால் வாழ்க்கைப் பயிர் செழிக்கும்; வளம் கொழிக்கும்.

மையம் இன்றி ஒரு வட்டம் இருக்க முடியாது. அதுபோலவே ஒரு வட்டமின்றி ஒரு மையம் இருக்க முடியாது. இஃதோர் எளிய உண்மை. அன்பில்லையேல் உலகினைச் சீர்திருத்தவோ, போராடவோ, புரட்சி செய்யவோ, புதிய சமுதாயம் ஒன்றினை உருவாக்கவோ எவ்வளவு வருந்தி முயன்றாலும் முடியவே முடியாது. அன்பும் உண்மையும் வாழ்க்கைப் பறவையின் இரு சிறகுகள்.

வாழ்க்கையில் போராடி வெல்வது ஒருவகை இன்பம். அதைவிட்ப் புரட்சியின் வெற்றியில் வாழ்க்கையைக் கொண்டாடி மகிழ்வதே பேரின்பம்.

அறிதொறும் அறியாமையை வாழ்ந்து கற்றோம்; கற்றனைத் தூறும் அறிவு என்பதைக் கல்வியால் பெற்றோம்; அன்பின் வழியது உயிர்நிலை என்பதைப் பட்டறிவால் உற்றோம். இந்த மெய்மைகளை

6