பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் o த. கோவேந்தன்

  • இளமை என்பது, எதிர்கால மனித இனத்திற்கான அடிப்படை

யான ஆணிவேர் போன்ற இன்றியமையாத ஒர் ஆற்றலாகும்.

ஏ.வி.லுனாசாஸ்கி

  • நம் இளைஞர்கள் இலிச்சின் இளைஞனைப் போல் இருக்க வேண்டும்(விளாடிமிர் இலிச் இலெனின்), அது அவனது தொடர்ந் துள்ள ஆர்வத்தை மற்றவருள் தொற்றுவிக்கும் இளமை நிறைந்த தண்மையை மட்டும் உள்ளடக்கியதாக இல்லாமல், அறிவுக் கூர்மை,விழிப்புடனிருத்தல், காலம் காலமாகத் திரட்டிப் பெறப்பட்டு வந்த பண்பாட்டிலிருந்து தேவையான முடிவுகளை மேற்கொள்ளும்

ஆற்றலை உள்ளடக்கியதாகவும் இருக்க வேண்டும்.

ஏ.வி.லுனாசாஸ்கி

  • ஒரு குறிப்பிட்ட உறுதியான நோக்கம், தன் கட்டுப்பாடு, தனக்குத் தானே நேர்மையாக இருப்பது, இக்காலத்தில் மதிப்பு மிக்கதாகக் கருதப்படும் சோர்வில்லாமல் உழைக்கும் உணர்வு . இவற்றைத் தான் நம் இளைஞர்கள் ஏற்கும்படி நீ செய்ய வேண்டும்.

என்.பி.ஓகரேவ்

  • உனது இளமையைப் போற்றிப் பெருஞ்செல்வம் போல் பாது காத்துக் கொள்: அதைவிட சிறந்ததும், மதிப்பு மிகுந்ததும் இவ் உலகம் முழுவதிலும் வேறெதுவுமில்லை. மாக்சிம் கோர்கி
  • வாழ்க்கையின் நோக்கமே புரட்சிக்குப் பணியாற்றவது என்பது தான். நமது காலத்தில் வேறெந்த நோக்கமும் இருக்க இயலாது. மாக்சிம் கோர்கி
  • சில மாபெரும் அற்புதமான நோக்கங்களுக்காக, நீடித்து நிற்கும் பிணைப்புகளை இளமையில் உருவாக்கிக் கொள்ளவோ, குறைந்தது சில எளிய ஆனால் நேர்மையான, பணிகளை மேற் கொள்ளவோ தவறியவன், அது எவ்வளவு மகிழ்ச்சி நிறைந்த தாக இருந்த போதும், அது எத்தனை இனிய நினைவுகளை விட்டுச் சென்றாலும் அடையாளமற்று அவனது இளமை இழந்துவிட்டதாகவே கருதிக் கொள்ளலாம். திமிட்ரி பிசரேவ்

86