பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

எல்லாம் சங்கச் சான்றோரிடமும் வள்ளுவரிடமும் கொண்டோம், உயர்ந்தோம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின் பெரியாரால் விழிப்புற்றோம். தங்கப்பாவைக் கண்டு கொள்ளாமலேயே காரிருளில் மீண்டும் புதைகிறோம்.

ஒரு நூற்றாண்டுக் காலம் சாக்ரடிக முதல் இரசல் வரை ஏதோ நல்லெண்ணப் பலகணி வழிப் புத்தெண்ணங்களின் ஒளி சில அறிஞர்களால் கிடைத்தது. எனினும் நம் தன்முனைப்புகள், வாழ்வைத் தப்புத் தாளங்கள் ஆக்கும்; தாறுமாறாக இசைக்கும் போலிமைக்கும் முதன்மை தந்து வெற்றாரவாரக் கொக்குக் காலிகள் கூட்டத்தில் மீண்டும் விலங்காண்டிகளானோம்.

உலக வாழ்க்கையின் திருப்பு முனையாகச் செருமானிய காரல் மார்க்சின் எண்ணங்கள் வையத்துள் வாழ்வாங்கு வாழப் பல துறைகளிலும் புதிய வித்துகள் தூவி விழிப்புணர்வைத் தந்தன. “மாந்தனுக்குரிய அனைத்தும் என்க்குரியன என்றவர் மேலை நாட்டு முதல் மாந்தர் மார்க்க ஒருவரே. மாந்த இனத்தின் விடுதலை வாழ்வியக்கத் தலைமை மெய்ப்பொருள், அதன் நெஞ்சத் துடிப்பு, பாட்டாளி இனமே என்று காட்டியுவரும் மார்க்சே. ஏட்டுப் புலமை யாளராகவும் வாழ்க்கைப் புலமையராகவும் வாழ்ந்தவர் அவர். அதனால்தான் ஒவ்வொரு மாந்தனும் மானுடத்துக்குப் பாடுபட வேண்டும்; அதுவே வாழ்க்கை அறிவியல் வளர்ச்சி என்றார். மக்கள் தங்களைப் பற்றியே அச்சமடையும்படி கற்பித்தால்தான் அவர் களுக்குத் துணிவு ஏற்படும்’, என்றவர் அறிவால் உலகை அறிந்ததைவிட, அன்பால் உலகை அறிந்து அன்பே மாற்றத்தை உண்டாக்கும் என்று தம் பன்முகச் சிந்தனையால் பாரறியச் செய்தார்.

“அறிவு கரடு முரடுகளைச் சமன்படுத்துகிறது; தடைகளை நீக்கிப் பாதையை ஆற்றொழுக்காக்குகிறது. வழியில் கிடக்கும் முட்களை அகற்றுகிறது. அன்பில்லாவிட்டால் வாழ்க்கையில்

7