பக்கம்:சிந்தனைச் செம்மலர்கள்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிந்தனைச் செம்மலர்கள் த. கோவேந்தனர்

தவிர்க்கப்பட இயலாத இன்றியமையாமை வாய்ந்தவையாக

ஆகிவிட்டன. வி.இ.இலெனின்

  • பொதுவுடமையின் உயர்ந்த நிலை வரும் வரை, உழைப்பின் அளவு, நுகர்வதின் அளவு ஆகியவற்றின் மீது அரசாலும், சமுகத் தாலும் கருமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வேண்டுமென சமன்மையர்கள் கோருகின்றனர். வி.இ.இலெனின்
  • வேலை செய்யாதவன், உண்ணவும் கூடாது . இதுதான் சமன் மையத்தின் நடைமுறையிலான ஆணையாகும். இவ்வாறுதான் அனைத்துச் செய்திகளும் நடைமுறையில் அமைக்கப்பட வேண்டும். வி.இ.இலெனின்
  • இந்த விதியை மக்களின் மனத்தில் பதிய வைக்கவும் அதனை ஒரு பழக்கமாக மாற்றவும், எளிய மக்களின் அன்றாட வாழ்வில் கொண்டு வரவும் நாம்பாடுபட வேண்டும்."அனைத்தும்ஒவ்வொரு வருக்காக, ஒவ்வொன்றும் அனைவருக்காக”“அவனது ஆற்றலுக் கேற்றபடி ஒவ்வொருவரிடமிருந்தும், அவனது தேவைகளுக் கேற்றவாறு ஒவ்வொருவருக்கும்”. பொதுமை ஒழுக்க நெறியும், பொதுமை உழைப்பும் படிப்படியாக, ஆனால் உறுதியாக,

நடைமுறைப்படுத்தப் பட நாம் பணியாற்ற வேண்டும்.

வி.இ.இலெனின்

  • உழைப்பாளியின் விளைபயனை உயர்த்தவும், ஒவ்வொரு மணி தானியத்தையும், கரி, இரும்பு, மற்ற விளை பயன் பொருள் களைப் பாதுகாக்கவும், இடைவிடாத, கடுமையான உழைப்பைப் பற்றி ஆர்வம் மிக்க அக்கறையை உழைப்பாளிகளின் அனைத்து நிலையினரும் வெளிக்காட்டும்போது, பொதுவுடமை தொடங்குகிறது. வி.இ.இலெனின்
  • சமன்மை உழைப்பாளரின் பொதுவுடைமை அமைப்பின் முதல்படி யான பொதுவறம் எண்பது உழைக்கும் மக்களின் விடுதலை

91